தமிழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் சக்திகள் முதலமைச்சர் வேதனை!
சென்னை, மார்ச் 28 - தமிழ்நாட்டிற்கு அவப்பெயரை ஏற் படுத்த முயற்சிக்கும் சக்திகளுக்கு பிர தான எதிர்க்கட்சியும் துணை போகிற வகையில் தூபம் போடுகிறது என்றும், சில ஊடகங்களும், பத்திரிகைகளும் சேர்ந்து துணை போவது மேலும் வேதனை அளிக்கிறது என்றும் முத லமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், வெள்ளிக்கிழமை நேரமில்லா நேரத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை குறித்து முன்னறிவிப்பு ஏதுமின்றி கேள்வி எழுப்ப முயன்று, அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்த அதிமுக உறுப்பி னர்கள் அவையில் இருந்து வெளி யேற்றப்பட்ட நிலையில், உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்த அவைக்கும், அவையின் மூலம் நாட்டு மக்களுக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுகிறது. பெரிய சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏதுமின்றி, மக்கள் அமைதியாக, இணக்கமாக வாழ் கிறார்கள்” என்றார்.