tamilnadu

img

ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்படும்

ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்படும்

சட்டப் பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு

சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்  துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறைகளின் புதிய அறிவிப்புகள் வருமாறு: சென்னை, மதுரையில் ஜூனி யர் ஹாக்கி உலக கோப்பை இளைஞர்களிடையே விளை யாட்டு கலாச்சாரத்தை ஊக்குவிக்க வும், உடல் திறன் வளர்க்கவும் முதலமைச்சர் இளைஞர் விளை யாட்டுத் திருவிழா அனைத்து வட்டாரம் மற்றும் மாவட்ட அள வில் ரூ.45 கோடியில் நடத்தப் படும்.

மாநில மற்றும் தேசிய அளவி லான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போது ஏற்படும் விபத்துகளினால் உண்டாகும் உடல் காயங்கள் மற்றும் உயிரி ழப்பை ஈடு செய்து உதவிடும் வகை யில் 25 ஆயிரம் வீரர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப் படும். திருவள்ளூர், திருவண்ணா மலை, தஞ்சாவூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட் டங்களில் பாரா விளையாட்டு மை தானங்கள் ரூ.7.5 கோடியில் அமைக் கப்படும். ஸ்குவாஷ் உலகக் கோப்பை  போட்டி, 2026 ஆம் ஆண்டில் மீண்டும் சென்னையில் நடத்தப்ப டும். இதில் 15 நாடுகளில் இருந்து சிறந்த வீரர்கள் பங்கேற்க உள்ள னர். தமிழ்நாடு 1000 கி.மீ.க்கும் மேலான நீளமான கடற்கரையைக் கொண்டு, சர்வதேச அலைச்  சறுக்கு போட்டிகள் நடத்துவதற் கான திறனைக் கொண்டுள்ளது.

இதனால், 2026 ஆம் ஆண்டில் ஆசிய அலைச்சறுக்கு சாம்பி யன்ஷிப் போட்டி நடைபெறும். படகோட்டுதல் போட்டியா னது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாகும். இந்த விளையாட் டில் இந்திய அணியினர் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில், ஆசிய இளையோர் படகோட்டுதல் சாம்பியன்ஷிப் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப் படும். இதில் 11 நாடுகளைச் சேர்ந்த  100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து  கொள்ள உள்ளனர். 24 நாடுகள் பங்கேற்கும் ஜூனி யர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை-25 போட்டிகள் சென்னை  மற்றும் மதுரை ஆகிய நகரங்க ளில் ரூ.55 கோடியில் நடத்தப்படும். 42 ஆயிரம் கிராமங்களில் வேலைவாய்ப்பு ‘வாழ்ந்து காட்டுவோம் திட்டம்-2.0’ வெற்றி பெற்றதன் அடிப் படையில், நடப்பாண்டில் மேலும்  120 வட்டாரங்களில், ரூ.1,000 கோடி யில், உலக வங்கியுடன் இணைந்து வாழ்ந்து காட்டுவோம் திட்டம்–3.0 துவங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

42 ஆயிரம் கிராமப் புற  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் சுய வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி ரூ.  66 கோடியில் வழங்கப்படும். பழங்குடியினர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திரு நங்கையர் உள்ளிட்ட 2,500  சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு  நடப்பாண்டில் ரூ. 25 கோடி வாழ்வா தார நிதியாக வழங்கப்படும். சென்னை மெரினா கடற்கரை யில் 2024 டிசம்பர் மாதத்தில் நடை பெற்ற உணவுத் திருவிழாவின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடப்பாண்டில் 5 மண்டல அளவில்  உணவுத் திருவிழாக்கள் நடத்தப் படும். நடப்பாண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் ரூ. 400 கோடி அளவில்  விற்பனை செய்வது உறுதி செய்யப் படும். நலிவு நிலை மக்களுக்கு ரூ.100 கோடி நலிவு நிலை குறைப்பு  நிதி வழங்கப்படும். நடப்பாண்டில் 6,000 சுய உதவிக் குழுக்களுக்கு 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய முத லீட்டு நிதி வழங்கப்படும். திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள  நான்கு வட்டாரங்களில் வறு மையை ஒழிக்கும் விதமாக 6,000  மிகவும் ஏழை மற்றும் நலிவுற்ற  குடும்பங்கள் அடையாளம் காணப் பட்டு 25 கோடி ரூபாயில் நிலையான வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அனுபவ மையம் மாநில திட்டக் குழுவின் கொள்கை மற்றும் ஆளுகைக் கான அனுபவ மையம் அமைக்கப் படும். அரசுத் துறைகளில் ஆதா ரங்களின் அடிப்படையில் கொள்கை வகுக்கும் பணிகளை மேற் கொள்ள ஏதுவாக “பொருள் இயல்  மற்றும் புள்ளியியல்” பிரிவு அமைக்கப்படும். தூய்மை இயக்கம் தமிழ்நாட்டில் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் தினந் தோறும் உருவாகும் திடக்கழிவு களை மேலாண்மை செய்வதில் ஒரு  புரட்சியை ஏற்படுத்தும் வகை யில் தூய்மை இயக்கம் என்ற ஒருங் கிணைந்த அமைப்பு சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின்கீழ் ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டில் உள்ள 11 பல்கலைக்கழகங்களில் ‘நான் முதல்வன் பல்கலைக்கழக செயல்  மையங்கள்’ ரூ.1.10 கோடியில் அமைக்கப்படும். சாதனைகளில் முதலிடம் நோக்கி... இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை, இந்தியாவில் நம்பர்-1 இடத்தை நோக்கி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. வெற்றி பெற்று விட்டால் நிச்சயமாக இந்த உலகமே நம்மை கொண்டாடும். ஆனால், வெற்றி பெறுவதற்கு முன்பே தகுதியுள்ள வீரர்களை கொண்டாடுகின்ற அரசுதான் நமது  அரசு என்றும் இதற்கான உதா ரணங்கள் பலவற்றை சுட்டிக் காட்டி னார். மேலும், சென்ற நிதி ஆண்டில், மொத்தம் ரூ.15 கோடி  செலவில் சென்னையில் நடத்தப் பட்ட பல சர்வதேச - தேசிய போட்டி களின் விவரத்தை முழுமையாக வாசித்தார். முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில், முதல் முறையாக E-Sports-ஐ demo game ஆக நடத்தியதால், 2025 ஆம் ஆண்டிற்கான ஜெம் (GEM) விருது மும்பையில் தமிழ் நாடு அரசுக்கு சமீபத்தில் வழங்கப் பட்டது.

நிதி தேவைப்படும் வீரர்களுக்கு உதவுங்கள்

தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுண்டேசன் எந்த அளவுக்கு நம்முடைய வீரர்கள் வாழ்வை மாற்றுகிறது என்பதற்கு உதாரணம், வட சென்னை யைச் சேர்ந்த கேரம் வீராங்கனை காசிமா. அவரைப் போல, நூற்றுக் கணக்கான காசிமாக்கள் உருவாக நம்முடைய தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடர்ந்து துணை நிற்கும். ஆகவே, சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களுடைய தொகுதிகளில், விளையாட்டு வீரர்கள் யாருக்காவது போட்டிகளில் பங்கேற்க நிதி உதவி தேவைப்பட்டால்,  www.tnchampions.sdat.in என்ற இணையதளத்தில் தயவுசெய்து விண்ணப் பிக்க சொல்லுங்கள். நிச்சயம் திறமைக்கு ஏற்ப, நிதி உதவி அளிக்கப் படும். •••

உலகமே திரும்பிப் பார்த்த கார் பந்தயம்

தெற்காசியாவில் முதன் முறையாக Night Street Circuit கார் பந்தயம் சென்னையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இப்போட்டியில் 15 நாடுகளில் இருந்து, 40 கார் பந்தய வீரர்கள் பங்கேற்றனர். இந்த இரண்டு  நாட்களில் மட்டும் சுமார் 12 ஆயிரம் பேர் டிக்கெட் வாங்கி, நேரில் பார்த்து ரசித்தனர். இப்போட்டி ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பிப் பார்க்க  வைத்தது. •••

மினி ஸ்டேடியம் திட்டம்

சட்டமன்றத் தொகுதிகள்தோறும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்ற திட்டத்தின்படி, சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி, சோழவந்தான், திருவைகுண்டம் மற்றும் காரைக்குடி ஆகிய தொகுதிகளில் மினி ஸ்டேடி யங்கள் கட்டி முடித்து திறக்கப்பட்டுள்ளன. மேலும் 22 தொகுதிகளில் மினி  ஸ்டேடியங்கள் அமைக்கப்படும் என்று துணை முதலமைச்சர் அறி வித்தார். •••

2.65 லட்சம் நபர்களுக்கு வேலை

“தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலமாக, கடந்த 3 ஆண்டுகளில், நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாம்களில் 2 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட நபர்களில் 1 லட்சத்து  34 ஆயிரம் பேர் மகளிர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி” என்று துணை முதலமைச்சர் தெரிவித்தார்.