states

img

15 நாளில் 51 அரசு ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்குப் பலி..... பாஜக ஆளும் ம.பி. மாநிலத்தில் நிகழ்ந்த துயரம்...

போபால்:
மத்தியப் பிரதேச மாநில பாஜகஅரசின் அலட்சியத்தால் 15 நாட்களில் 51 அரசு ஆசிரியர்கள் கொரோனாவுக்கு பலியான துயரம் நடந் துள்ளது.கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மத்தியப்பிரதேசமும் ஒன்று. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மத்தியப்பிரதேசத்தில் 9 ஆயிரத்து 720 பேருக்குகொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. எனினும், சிவராஜ் சிங்சவுகான் தலைமையிலான மத்தியப் பிரதேச பாஜக அரசோ, கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் தொடர்ந்து அலட்சியமாக இருந்து வருகிறது. 

இந்நிலையில் மத்தியப் பிரதேச அரசு ஆசிரியர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 15 நாட்களில் மட்டும் 51 அரசுஆசிரியர்கள் கொரோனா தொற் றுக்கு பலியாகி இருப்பதாக கூறியுள்ளது. கொரோனாவுக்கு பலியான ஆசிரியர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களையும் பட்டியலாக வெளியிட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சிந்த் வாரா மாவட்டத்தில் மட்டும் 28 ஆசிரியர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தார் மாவட்டத்தில் 14 ஆசிரியர்கள், பீடல் மாவட்டத்தில் 6 ஆசிரியர்கள், சிவானி மாவட்டத்தில் 10 ஆசிரியர்கள் உயிரிழந்துள் ளனர் என்று குறிப்பிட்டிருக்கும் அந்தஅறிக்கை, ஆசிரியர்களின் உயிரிழப்புக்கு மாநிலத்தை ஆளும் பாஜகஅரசின் அலட்சியம்தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளது. ஆசிரியர்களை வீட்டில் இருந்தேபணிபுரிய அனுமதிக்க வேண்டும் எனவும் அரசு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.