போபால்:
மத்தியப் பிரதேச மாநிலத்தில், முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பில், ஆர்எஸ்எஸ், ஜனசங்கத் தலைவர் களைப் பற்றிய பாடங்கள் கற்றுத்தரப் படும் என்று அம்மாநில பாஜக கல்வியமைச்சர் விஸ்வாஸ் சரங் சர்ச்சையைஏற்படுத்தியுள்ளார்.இதுதொடர்பாக கடந்த ஞாயிறன்று செய்தியாளர்களுக்கு விஸ்வாஸ் சரங் பேட்டியளித்தார்.
“எம்பிபிஎஸ் முதலாமாண்டின் அடிப்படை பாடப் பிரிவில் நன்னடத்தை சார்ந்த பாடங்கள் இடம் பெற வேண்டும் என்று தேசிய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து மத்தியபிரதேசத்தில் எம்பிபிஎஸ் முதலா
மாண்டின் அடிப்படை பாடப்பிரிவில் பி.ஆர். அம்பேத்கர், சுவாமி விவேகானந்தர், ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவார், பாஜக தலைவர் தீனதயாள் உபாத்யாய, ஆயுர்வேத மருத்துவத்துக்கு முக்கிய பங்களித்த மகரிஷி சரகர், இந்தியாவில் அறுவை சிகிச்சையின் தந்தையென போற்றப்படும் சுஷ்ருதாஆகியோர் குறித்த பாடங்கள் கற்பிக்கப்பட உள்ளன.
இந்த பெருந்தலைவர்களைப் பற்றிய பாடங்களைக் கற்பிப்பதின் மூலம் மாணவர்களுக்கு நல்லொழுக்கம், நன்னெறி, சமூக, மருத்துவ பண்பாடு ஆகிய விஷயங்கள் கொண்டு சேர்க்கப்படும். இந்தப் பாடத் திட்டத்திற்கு தேசிய மருத்துவக் கவுன்சிலும் இதற்கு ஒப்புதல் அளித்து விட்டது” என்று அந்த பேட்டியில் அவர் கூறினார். இது ம.பி. மாநிலத்தில் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ம.பி. அரசின் பாடத்திட்டத்தால், மாணவர்கள் மத்தியில் இந்துத்துவா பிரிவினைவாத சிந் தனை புகுத்தப்படும் ஆபத்து உள்ளது என்று கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
“ஹெக்டேவாரும், உபாத்யாயாவும் சுதந்திரப் போராட்டத்தில் என்ன மாதிரியான பணிகளைச் செய்துள்ளார்கள் என்பதை பாஜக அரசு விளக்க வேண்டும்” என்றும், “எதற்காக அவர்களைப் பற்றிமருத்துவ மாணவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்?” என்றும் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல் நாத் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்துத்துவா தலைவர்களைப் பற்றிமட்டும் பாடம் வைத்தால், எதிர்ப்பு எழும்என்பதால், ம.பி. பாஜக அரசு சாமர்த்தியமாக டாக்டர் அம்பேத்கரை முன்னிறுத்தி மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள் ளது.