உத்தரபிரதேசம் காயம்கஞ்ச் சாலையில் பொலிரோவும், டெம்போவும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காயம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாட்டியாலியில் நடக்கும் சத்சங்கம் ஒன்றில் கலந்துகொள்ள சிலர் செவ்வாய்க்கிழமை டெம்போவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அசோக்பூர் மோர் கிராமம் அருகே வேகமாக வந்த பொலிரோ கார் டெம்போ மீது மோதியது.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்கள் அனைவரும் டெம்போவில் பயணித்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு பாட்டியாலி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.