வக்பு திருத்தச் சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது; அரசியல் உள்நோக்கம் கொண்டது
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரிக்கை
வக்பு சட்டம் அரசியல மைப்பிற்கு விரோதமா னது. அதே போன்று அரசி யல் ரீதியாக உள்நோக்கம் கொண் டது என கேரள முதலமைச்சர் பின ராயி விஜயன் எச்சரிக்கை விடுத் துள்ளார். இதுதொடர்பாக பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கூறுகையில்,”வக்பு சட்டம் நம் நாட்டின் மத நம்பிக்கை மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை மீறுகிறது. முஸ்லிம்களை ஓரங்கட்டுவதற் கான வாய்ப்பாகவும், அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறுவதற் கான வாய்ப்பாகவும் ஆர்எஸ்எஸ் - பாஜக இதனைப் பார்க்கிறது. ஆர்எஸ்எஸ் சிறுபான்மையினரை நாட்டின் உள்நாட்டு எதிரிகள் என்று வெளிப்படையாக அடையாளம் காட்டியுள்ளது. குறிப்பாக வக்பு சட்டம் முஸ் லிம்களுக்கு மட்டும் எதிரானது என்று நான் முன்பே கூறியிருந் தேன். அதையேதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான “ஆர்கனைஸர்” கட்டுரையும் உறு திப்படுத்தியுள்ளது. மக்களே ஒன்றை மறந்து விடாதீர்கள். மீண் டும் சொல்கிறேன். ஆர்எஸ்எஸ் சிறுபான்மையினரை உள்நாட்டு எதிரிகளாக கருதுகிறது. முஸ்லிம் கள், கிறிஸ்தவர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளது. இதுதான் அவர் களின் அணுகுமுறை. ஒன்றிய அரசு சிறுபான்மையினருக்கு எதிரான, பெரும்பான்மையினரைத் திருப் திப்படுத்தும் வக்பு சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதனால் தான் கேரள சட்டமன்றம் வக்பு சட் டத்துக்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றியுள்ளது. அதே போல இடது சாரிக் கட்சிகளும் சட்டத்தை நாடா ளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்த னர்” என அவர் கூறினார்.
முனம்பம் பிரச்சனை: பாஜக சதி
பினராயி விஜயன் மேலும் கூறு கையில்,”முனம்பம் (கேரளம் மாநி லத்தின் கொச்சி அருகே உள்ளது - வக்பு நிலப் பிரச்சனை பகுதி) மக்களின் பிரச்சனை என்னவென் றால், அவர்கள் மிக நீண்ட கால மாக அங்கே வசித்து வருகிறார்கள். அங்குள்ள முக்கியமான பிரச்சனை அம்மக்கள் அங்கிருந்து வெளி யேற விரும்பவில்லை. நீண்டகால மாக அங்கே வசித்து வருவதால் அவர்களின் உரிமைகளை பாது காக்க அரசு முன்னுரிமை அளித் தது. அவர்களின் பிரச்சனைகளை ஆராயவும், அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை ஆய்வு செய்யவும் குழு அமைக் கப்பட்டுள்ளது. சிலர் (ஆர்எஸ்எஸ் - பாஜக) முனம்பம் மக்களிடம் சென்று பேசிய பின்பு பிரச்சனை எழுந்துள் ளது. இதில் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென் றால் முனம்பம் பிரச்சனை வக்பு டன் தொடர்புடையது. சிலர் இதில் எவ்வாறு குழப்பத்தை உண்டாக்கி, அரசியல் ஆதாயம் பெறலாம் என்று நினைக்கின்றனர். அதாவது குட் டையைக் குழப்பி மீன்பிடிப்பது எனச் சொல்வது போல ஆர்எஸ்எஸின் மிக முக்கியமான செயல்திட்டம் பாஜகவிடம் உள் ளது. முனம்பம் பிரச்சனைக்கு வக்பு திருத்த சட்டத்தில் தீர்வு இருக்கிறது என்று சிலர் சொல்கி றார்கள். இது பொய் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. இது புதிய சட்டம் அரசியலமைப் பின் பிரிவு 26-ஐ மீறுகிறது. சட்டத்தின் எந்தப் பிரிவு முனம்பம் பிரச்சனைக்கு தீர்வு காண்கிறது என்று தெளிவுபடுத்த வில்லை. இறுதியாக, ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜுவை இங்கே அழைத்துவந்து பேச வைத்தது அதை அரசியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்வதற்கான முயற்சி. ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தற்செயலாக உண்மையை உடைத்து விட்டார். வக்பு திருத்தச் சட்டத்தாலும் முனம் பம் மக்களுக்கு நீதி கிடைக்காது என்று அவர் ஒப்புக்கொண்டுள் ளார். பிரச்சனையைத் தீர்க்க தொடர்ச்சியாக உச்சநீதிமன்றத் தில் போராட்டம் நடத்த வேண்டும்” என அவர் கூறினார்.