states

img

கோயில்கள் கொலைக்களம் அல்ல..... ஆர்எஸ்எஸ் கொலைகளுக்கு முடிவுகட்ட கேரளம் முன்வர வேண்டும்.... எம்.ஏ.பேபி

திருவனந்தபுரம்:
கோயில்கள் கொலைக் களம் அல்ல எனவும், ஆர்எஸ்எஸ் கொலைகளை முடிவுக்கு கொண்டுவர கேரளம் முன்வர வேண்டும் என்றும்சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் எம்.ஏ.பேபிதனது முகநூல் பதிவின்மூலம் கேரள மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள் ளார்.இதுகுறித்து முகநூலில்அவர் மேலும் கூறியிருப்ப தாவது: 

ஆலப்புழாவின் வள்ளிக் குன்னத்தில் பதினைந்து வயதுஅபிமன்யு ஆர்எஸ்எஸ் ஊழியர்களால் குத்திக் கொல்லப் பட்டார். ஒரு சிறுவனை கடாரியால் வயிற்றில் ஒரே குத்தில் கொல்ல ஆர்எஸ்எஸ் தயங்கவில்லை.ஒரு நூற்றாண்டு காலமாக அவர்கள் இந்தியா முழுவதும் நடத்திய கொலைகள் மற்றும் வகுப்புவாத கலவரங்கள் இதை நிரூபித்துள்ளன. ஒரு எஸ்எப்ஐ ஊழியர், அவர் ஒரு பள்ளி மாணவர், அவரது தாயார் புற்றுநோயால் இறந்தார். ஆர்எஸ்எஸ்ஸின் இத்தகைய கொலைகளைத் தடுக்க கேரள சமூகம் முன்வரவேண்டும்.கோயில்களைக் கொலைக்களமாக்கும் ஆர்எஸ்எஸ் நடைமுறை இங்கு மீண்டும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கோயில்களும் பண்டிகை களும் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள். ஆர்எஸ்எஸ்அவர்களின் பாசிச அர சியலைத் தொடர்வதற்கான இடமல்ல கோயில்கள். விஷு திருவிழாவின் போது இந்த கொலை நடந்துள்ளது. விஷு நமது புத்தாண்டு விழா. இந்தசுப தினத்தில்தான் ஆர்எஸ்எஸ் கோவிலுக்கு வரு கிறது.கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு இத்தகைய கொலை களுக்கு எதிராக கேரளம் ஒருநிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. கொலை என்பது அரசியல் அல்ல. வன்முறை  மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.