கொச்சி:
போதைக்கு எதிரான போராட்டம் பரவலாக்கப்பட வேண்டும் என்று கேரள தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் தெரிவித்துள் ளார்.மாநில கலால் துறையின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு மிஷன் ஏற்பாடு செய்த போதைப்பொருள் தடுப்பு தின கொண்டாட்டங்களை மாவட்ட அளவில் அமைச்சர் பி.ராஜீவ் தொடங்கி வைத்தார். அரசு நிறுவனங்களும் உள்ளூர் அரசாங்கங்களும் இதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதை மிகவும்பிரபலமாக்குவதன் மூலம், போதைப் பொருள் எதிர்ப்பு சிந்தனையை சமூகத்தில்அதிகப்படுத்தவும், அதன் மூலம் போதைப்பொருள் மாபியாவை ஒழிக்கவும் முடியும். போதைப்பொருள் எதிர்ப்பு சமூகத்தை வடிவமைக்கும் நோக்கத்துடன் விடுதலை மதுவிலக்கு மிஷன் செயல்படுத்திய திட்டங்கள் முன்மாதிரியானவை என்று அவர் மேலும் கூறினார்.