states

img

கேரள சிபிஎம் சட்டமன்றக் குழுத் தலைவராக மீண்டும் பினராயி விஜயன் தேர்வு...

கண்ணூர்:
கடல் அலை போல் தொடர்ந்து வந்த நெருக்கடிகளை எதிர்கொண்டுபாதுகாப்பு கோட்டையை கட்டியதால் ‘கேப்டன்’ என்று தோழர்களால் அன்புடன் குறிப்பிடப்பட்ட பினராயி விஜயன் மீண்டும் முதல்வராவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள சட்டமன்றக்குழு செவ்வாயன்று உறுதி செய்தது.

தாக்குதல்கள் மற்றும் வேட்டையாடுதல்களில் இருந்து தப்பிய கேரளாவின் நாயகனான பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதல்வர் பொறுப்புக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளார். சட்டமன்றத்திற்கு ஆறாவது முறையாக தேர்வாகியுள்ள பினராயி, தர்மடம் தொகுதியிலிருந்து மிக அதிக வாக்குகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இது இரண்டாவது முறையாகும். அவர் மூன்றுமுறை கூத்துப்பரம்பிலும், பையனூரில் ஒருமுறையும் வெற்றிபெற்று சட்டசபைக்கு சென்று அனுபவம் பெற்றவர்.  உறுதியின் அடையாளமாகவும், மாறாத கம்யூனிச துணிச்சலின் அடையாளமாகவும் இருக்கும் அவர், முதன்முறையாக தனது 26 வயதில் சட்டசபையில் நுழைந்தார். அவசரகாலத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதிலும், அவர் காவல்துறை யினரால் கொடூரமாக தாக்கப்பட் டார். சட்டமன்றத்தில் உள்துறை அமைச்சர் கே. கருணாகரனை சந்தித்து தமது இரத்தம் தோய்ந்த ஆடைகளை உயர்த்திப்பிடித்து கேள்வி எழுப்பிய பினராயி, ஜனநாயகத்திற்கான கேரளத்தின் அடையாளமாகவும் மாறினார்.

1945 மே 24 அன்று கள் இறக்கும் தொழிலாளியான முண்டயில் கோரன் – கல்யாணியம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவரது குழந்தைப் பருவம் வறுமைநிறைந்தது. பினராயி யு.பி. பள்ளிமற்றும் பெரலசேரி உயர்நிலைப் பள்ளியில் கல்வி முடித்த பின்னர்,ஒரு வருடம் நெசவுத் தொழிலாளி யாக பணியாற்றினார். தலச்சேரி அரசு ப்ரெண்ணன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். கேரள மாணவர் சங்கம் (கேஎஸ்எப்) மாநிலத் தலைவர், செயலாளர் மற்றும் கேரள சோசலிஸ்ட்வாலிபர் முன்னணி (கேஎஸ்ஒய்எப்) மாநிலத் தலைவராக பணியாற்றி னார். 1968 ஆம் ஆண்டு கண்ணூர் மாவட்ட பிளீனத்தில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1972 இல் மாவட்ட செயற்குழு உறுப்பினர், 1978 இல் மாநிலக் குழுஉறுப்பினர். 1986 இல் கண்ணூர் மாவட்ட செயலாளர். 1988இல் அவர்மாநில செயற்குழு உறுப்பின ரானார். 1996 இல், அவர் கூட்டுறவு மற்றும் மின்துறை அமைச்சராக இருந்தபோது, கேரள மின் துறை ஒரு பாய்ச்சல் வேக முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. அதன் மூலம், கேரளம் பினராயி விஜயன் என்ற அரசியல்வாதியின் ஆளுமையை அனுபவித்தது. 1998 இல் தோழர் சடயன் கோவிந்தனின் மறைவைத் தொடர்ந்து, அவர் கட்சியின் மாநிலச் செயலாளரானார்.

தொடர்ந்து கண்ணூர், மலப்புரம், கோட்டயம், திருவனந்தபுரத்தில் நடந்த மாநில மாநாடுகளிலும் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கொல்கத்தாவில் நடைபெற்ற பதினாறாவது அகில இந்திய மாநாட்டில்மத்தியக் குழு உறுப்பினராகவும் பின்னர் அரசியல் தலைமைக்குழுஉறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.1971 ஆம் ஆண்டில் தலச்சேரியில் ஆர்எஸ்எஸ் வகுப்புவாத கலவரங்களை கட்டவிழ்த்துவிட்ட போது, தலச்சேரியில் மோதல் நடந்தபகுதிகளில் பினராயி விஜயனும் கட்சிஊழியர்களும் நடந்து சென்று அமைதியை ஏற்படுத்திய முன்மாதிரியான பணிகளை கலவரம் குறித்து விசாரித்த நீதிபதி விதயத்தில் ஆணையம் பாராட்டியது. எஸ்என்சி லாவ்லின் ஒப்பந்தம் தொடர்பாக பல பத்தாண்டுகளாக தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளானார். 

கேரள வரலாற்றில் கடந்த ஐந்து ஆண்டுகள் முக்கியமானவை. ஒக்கியும் இரண்டு வெள்ளங்களும் கேரளத்தை உருக்குலைத்தபோது நாம் ஒரு புதிய கேரளாவை உருவாக்க முடியும் என்ற செய்தியுடன் அவர் முன்னேறினார். நிபாவும் கோவிட்டும் வந்தபோது, அவர் மக்கள் மீதான அளவற்ற அன்பின்சிறந்த செய்தியுடன் முன்னால் இருந்து வழிநடத்தினார். அனைத்துத் துறைகளிலும் இணையற்ற முன்னேற்றத்தை சாத்தியமாக்கிய பினராயி விஜயனின் ஐந்தாண்டு ஆட்சி, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வறியவர்களை அரவணைத்துள்ளது.ஆசிரியரான கமலா, பினராயி யின் மனைவி. இவர்களுக்கு விவேக்என்ற மகனும் வீணா என்ற மகளும் உள்ளனர்.

                      *****************

சிபிஎம் அமைச்சர்கள் அறிவிப்பு; முதல்வர் தவிர பழைய முகங்கள் இல்லை... எம்.பி.ராஜேஷ் சபாநாயகர் ஆகிறார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள சட்டமன்றக் குழுத் தலைவராகவும், முதல்வராகவும் பினராயி விஜயனை கட்சியின் மாநிலக் குழு நியமித்துள்ளது. எம்.வி.கோவிந்தன், கே.ராதா கிருஷ்ணன், கே.என்.பலகோபால், பி.ராஜீவ், வி.என்.வாசவன், ஸஜி செரியன், வி.சிவன்குட்டி, பி.ஏ.முகமது ரியாஸ், டாக்டர். ஆர். பிந்து, வீணா ஜார்ஜ், வி. அப்துல் ரஹ்மான் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். சபாநாயகர் வேட்பாளராக எம்.பி.ராஜேஷ், கட்சிக்கொறடாவாக கே.கே.ஷைலஜா டீச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சட்டமன்றக் கட்சியின் செயலாளராக டி.பி.ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கட்சியின் மாநிலக்குழு கூட்டத்திற்கு எளமரம் கரீம் தலைமை தாங்கினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர்கள் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, பினராயிவிஜயன், கொடியேரி பாலகிருஷ்ணன், எம்.ஏ.பேபி ஆகியோர் கலந்து கொண்டனர்.