கேரளாவில் ஆன்லைன் லோக் அதாலத் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக, 'ஆன்லைன் நிரந்தர லோக் அதாலத்' சேவையை கேரள மாநிலத்தின் சட்டசேவை ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், ஆன்லைன் வழியே மக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் மே மாதம் முதல் வாரத்திலிருந்து இச்சேவை மக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.