states

img

அரசமைப்பு நெறிமுறைகளை கேரள ஆளுநர் மீறுகிறார்

பிருந்தா காரத் குற்றச்சாட்டு “கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தொடர்ந்து அரச மைப்பு சாசன கண்ணி யத்தையும் பொறுப் பையும் மீறி செயல் பட்டு வருகிறார்” என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரி வித்தார்.

முதல்வர் பினராயி விஜயன் மீது ஆளுநர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தில்லியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பிருந்தா காரத் அளித்த பதிலில்,”முதல்வர் கூறிய அல்லது கூறாமல் விடுபட்ட எதற்கும் கருத்து தெரிவிக்கவோ அல்லது விளக் கம் பெறவோ ஆளுநருக்கு அரசமைப்பு சாசனப்படி அதிகாரம் இல்லை. ஆளுநர் அரசமைப்பின் பிரதிநிதியாக செயல்படவில்லை. கேரளாவில் பாஜக செயல்படுத்த விரும்பும் ஒன்றிய அரசின் (தில்லி ராஜ்) பிரதிநிதியாகவே ஆளுநர் செயல்படுகிறார்” என பிருந்தா கூறினார்.