states

img

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

ஒன்றிய அரசின் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்துக்கு எதிரான தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக  நிறைவேற்றப்பட்டது.
அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழுவின் பரிந்துரைகளை ஏற்று 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை  செப்டம்பர் 18-ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுத் திட்டமிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல், மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் இரண்டையும் ஒன்றாக நடத்தவும், அடுத்த 100 நாட்களுக்குள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தலை நடத்தி முடிக்கவும் என்று அந்த குழு பரிந்துரைத்துள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றம் இரண்டிலும் அரசியல் அமைப்பு சட்டத் திருத்தங்களை கொண்டு வருவதன் மூலமே இதனை நிறைவேற்ற முடியும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இதனை மசோதாவாக தாக்கல் செய்ய ஒன்றிய அரசுத் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், கேரள சட்டப்பேரவையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் சார்பில் அமைச்சர் எம்.பி.ராஜேஷ் தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்தில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும், அதை அமல்படுத்தக் கூடாது என்றும் ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்ட பின்னர், கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.