சென்னை,மார்ச்.22- இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம் என சென்னையில் நடைபெற்ற தொகுதி மறு சீரமைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கேரளம் முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு.
தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் தொகுதி மறு சீரமைப்பு தென் மாநிலங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய கேரளம் முதல்வர் பினராயி விஜயன்; தொகுதி மறுசீரமைப்பு என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் சார்ந்தது அல்ல. இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம். பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும் என பேசினார்.
மேலும் பேசிய அவர்; தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மாநிலங்களுடன் அர்த்தமுள்ள உரையாடலை ஒன்றிய அரசு தொடங்க வேண்டும். மேலும் தெளிவுபடுத்த வேண்டியது கடமை ஒன்றிய அரசுக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்