tamilnadu

விவசாயிகள் மீது கடலூர் போலீசார் வழக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

விவசாயிகள் மீது கடலூர் போலீசார் வழக்கு 
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

விவசாயிகள் மீது கடலூர் போலீசார் வழக்குப் பதிந்திருப்பதற்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித் துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலா ளர் சாமி. நடராஜன் வெளியிட்டுள்ள அறிக் கையில், “ கடலூர் மாவட்டம் பெத்தாங் குப்பம், மலையடி குப்பம் கிராமத்தில் விவ சாயிகளின் அனுபவ நிலத்தில் முந்திரி  மரக்கன்றுகளை நடுவதற்காக சென்ற விவ சாய சங்க தலைவர்கள் பெ.சண்முகம், டி. ரவீந்திரன் மற்றும் 40 பெண்கள் உட்பட 132 விவசாயிகள் மீது கடலூர் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். கடலூர் காவல்துறையின் இச்செயலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக் கிறது.  முந்திரி மரங்கள் வெட்டப்பட்ட அனுபவ  நிலங்களில் மரக்கன்றுகளை நடுவதற்குச் சென்ற விவசாய சங்க தலைவர்களையும், விவசாயிகளையும்  அராஜகமான முறை யில் தடுத்து வலுக்கட்டாயமாக கைது செய்து  மண்டபத்தில் அடைத்தார்கள்.  மண்டபத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் வந்து  பேச்சுவார்த்தை நடத்தி ஒரு உடன்பாட்டுக்கு  வரப்பட்டது. அதன்படி, போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்வது என்று  அறிவித்த நிலையில், தலைவர்கள் மற்றும்  விவசாயிகள் மீது கடலூர் மாவட்ட காவல் துறை வழக்கு போட்டிருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக் கிறது. விவசாயிகளின் நில உரிமையை பாது காத்திட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெ டுக்கும்.  எனவே, போட்டப்பட்டுள்ள வழக்கை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ரத்து  செய்ய வேண்டுமென தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் வலியுறுத்துகிறது” என தெரி வித்து