states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங்

மாநிலங்களின் பிரதிநிதித்துவமும், நாடாளுமன்றத்தில் அவற்றின் சதவீதமும் குறைந்தால் ஒரு மாநில  முதலமைச்சர்கள் கவலைப்படுவது இயற்கையானது. பஞ்சாப்பில் இடங்கள் அதிகரிக்கும், ஆனால் பிரதிநிதித்துவ சதவீதம் குறையும். இதனால்தான் பகவந்த் மான், மு.க.ஸ்டாலின் மற்றும் பிற முதலமைச்சர்கள் தொகுதி மறுசீரமைப்பு பற்றி கவலைப்படுகிறார்கள்.

மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் விஜய் வடெட்டிவார்

மகாராஷ்டிர அமைச்சர் அஷிஷ் ஷெலாரின் தாராவி பகுதியில் இருந்து அதானிக்கு ஒரு அங்குல நிலம் கூட கொடுக்கவில்லை என்று கூறுகிறார். இது பொய்யானது. தாராவி மறு வளர்ச்சி என்ற பெயரில் ஏற்கனவே அதானிக்கு நிலம் கொடுக்கப்பட்டுவிட்டது. நாடகத்திற்கும் முடிவு இருக்கிறது.

தேசியவாத காங்கிரஸ் (சரத்) எம்.பி., சுப்ரியா சுலே

புதிய கல்விக் கொள்கை மூலம் மாநிலங்களுக்கு அழுத்தம் கொடுப்பது சரியானது அல்ல. மகாராஷ்டிரா
வில் மராத்தி மொழிக்கு மரியாதை செய்யப்படுகிறது. ஆனால் மறுபுறம் மராத்தி பள்ளிகள்  மூடப்படுகிறது. இது சரியானது அல்ல. மராத்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற ஒவ்வொரு மொழியும் மரியாதைக்குரியதாகவே இருக்க வேண்டும்.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் உடல்நிலை (மனநிலை) குறித்து அனைவரும் கவலை கொண்டுள்ளனர். தனக்கு பிடித்த முதலமைச்சர் நிதிஷ் குமார் தேசிய கீதத்தை அவமதித்த பின்னரும் பிரதமர் மோடி 
அமைதியாக இருக்கிறார்.