tamilnadu

7 மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட முடிவு

7 மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட முடிவு

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் 7 மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட  முடிவு எடுத்துள்ளதாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார். ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பு முடிவுக்கு எதிராக சென்னையில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நட வடிக்கைக் குழு கூட்டம் சென்னையில் நடை பெற்றது. அதன் பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற குழுத்  தலைவர் கனிமொழி, “இன்றைய கூட்டம்  வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இடம்பெ றும். நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கு பிற மாநிலத் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக உறுதியளித்துள்ளனர்” என்றார். பிரதமரை சந்திப்போம்! தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசின் அறிவிப்பு தெளிவை  ஏற்படுத்தவில்லை. குழப்பத்தைத்தான் ஏற்ப டுத்தி வருகிறது. தொகுதி மறுசீரமைப்பு வெளிப்படைத் தன்மையுடன் ஒன்றிய அரசு 1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக் கெடுப்பு அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். தொகுதி மறுவரையறை விவகாரத்தில்  ஒன்றிய பாஜக அரசு மாநில அரசுகளுடன்  கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் கூறிய  அவர், தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறி னார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விரைவில் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என்று முடிவு  செய்திருப்பதாகவும் தெரிவித்தார். புறக்கணிப்பா? திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் இந்த கூட்டத் தில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த  முறை அவர்களால் கலந்து கொள்ள முடிய வில்லை. அடுத்து நடக்கும் கூட்டத்தில் பங்கேற் பார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. நமது  முதல்வரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டி ருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி, பிரத மருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். எனவே,  இந்த இரண்டு கட்சிகளும் கூட்டத்தை புறக் கணிக்க வில்லை என்றும் தெரிவித்தார்.

“தொகுதி மறுசீரமைப்பு மூலம் எம்.பி.க்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டால், நமது மாநிலத்தின் குரல் மக்களவையில் குறைந்து பலவீனமாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஒன்றிய அரசின் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டியது தமிழ்நாட்டின் கடமை” என்றும் கனிமொழி கூறினார். தாய்மொழி ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள அனைவரின் முன்னால் வைக்கப் பட்டிருந்த பெயர்ப் பலகைகளில் அவர்களது  பெயர் ஆங்கிலத்திலும், அவரவர் தாய் மொழியிலும் எழுதப்பட்டிருந்தது. அதே போல் முதல்வர் ஸ்டாலினின் வரவேற்புரை கூட்டத்தில் பங்கேற்றோர், உரையை அவ ரவர் தாய்மொழியில் கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பரிசு பெட்டி இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த  மூன்று மாநில முதல்வர்கள், கர்நாடக துணை  முதல்வர், பிற அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு புவிசார் குறியீடு பெற்ற தமிழகத்தின் காஞ்சிபுரம் பட்டுச் சேலை, பத்தமடை பாய், தோடர்கள் ஷால்வை, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஊட்டி வர்க்கி, ஈரோடு மஞ்சள் மற்றும் கொடைக்கானல் பூண்டு ஆகியவை அடங்கிய பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டது. ‘வரலாற்றில் பொறிக்கப்படும்’ முன்னதாக, ஆலோசனைக் கூட்டத் திற்கு வருகை தந்த முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை வரவேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “நமது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்கள் நியாய மான தொகுதி மறுசீரமைப்பை உறுதி செய்வதன் மூலம் அதன் கூட்டாட்சி கட்ட மைப்பைப் பாதுகாக்க ஒன்றிணைந்த நாள்  இது. இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப் படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.