சுஷாந்த் - திஷா சாலியன் மரண விவகாரத்தை பீகார் தேர்தலுக்கு பயன்படுத்த பாஜக சதி
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந் திர சிங் தோனியின் வாழ்க்கை வர லாற்று படத்தில் நடித்து பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். பீகார் மாநி லத்தைச் சேர்ந்தவர். இவரது மேலாள ராக பணியாற்றிய திஷா சாலியன் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி மும் பையின் அடுக்குமாடி குடியிருப்பின் 13ஆவது மாடியிலிருந்து விழுந்து தற் கொலை செய்து கொண்டதாக கூறப்படு கிறது. அடுத்த 6 நாட்கள் கழித்து ஜூன் 14ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங்கும் மும்பை குடியிருப்பில் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார். இந்நிலையில், திஷா சாலியன் மரண மடைந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது தந்தை சதீஷ் சாலியன் 4 நாட்க ளுக்கு முன் செய்தியாளர்கள் சந்திப் பில்,”சுஷாந்த் சிங் ராஜ்புத் – திஷா சாலி யன் ஆகிய இருவரின் மரணத்தில் சிவ சேனா (உத்தவ்) தலைவரான ஆதித்யா தாக்கரேவுக்கு தொடர்பு உள்ளது”எனக் கூறினார். இந்த குற்றச்சாட்டிற்குஆதித்யா தாக்கரே மறுப்பு தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழலில், சதீஷ் சாலி யனின் குற்றச்சாட்டை சாதகமாக பயன் படுத்திக் கொண்ட பாஜக, இந்த விவ காரத்தை பீகார் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த சதி வேலை யில் இறங்கியுள்ளது. அதாவது பீகார் மகன் சுஷாந்த் சிங் மற்றும் அவரது உதவியாளர் திஷாவை “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவ சேனா (உத்தவ்) கட்சியின் தலைவர் ஆதித்யா தாக்கரேவால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அதனால் பீகாரில் சிவசேனா (உத்தவ்) கட்சியின் கூட்டணி கட்சிகளான ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சிகளின் “மகா” கூட்டணிக்கு பீகார் மக்கள் வாக்கு அளிக்க வேண்டாம் என பாஜக பிரச்சா ரத்தை தொடங்கியுள்ளது.
தந்தையை வளைத்த பாஜக
வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்க ளில் பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறு கிறது. இந்த தேர்தலை குறிவைத்து பாஜக, சுஷாந்த் சிங் ராஜ்புத் - திஷா சாலி யன் மரணத்தில் சிவசேனா (உத்தவ்) தலைவரான ஆதித்யா தாக்கரேவுக்கு தொடர்பு இருப்பது போன்று, திஷாவின் தந்தை சதீஷ் சாலியனை வளைத்து பாஜக வாக்குமூலம் கூறவைத்ததா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.