100 விழுக்காடு ஒத்துழைப்பு உறுதி
“அனைத்து கட்சிகளையும் ஒருங்கி ணைக்க முன்னெடுப்பை எடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. மக்கள் தொகை அடிப் படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது. தாங்கள் வெற்றி பெரும் மாநிலங்களின் மக்க ளவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்து வதும், தோல்வியைச் சந்திக்கும் மாநிலங்களில் தொகுதி களின் எண்ணிக்கையை குறைப்பதே பாஜகவின் நோக்க மாகும். அதன்படி பஞ்சாப் மாநிலத்தின் மக்களவைத் தொகுதி களும் குறைக்கப்படும். ஏனெனில், பாஜக பஞ்சாப்பில் வெற்றி பெறாது. இந்தத் தொகுதி மறுவரையறையால் இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே ஆதாயம் பெறும். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய அனைத்து மாநிலங்களும் பாதிப்பை சந்திக்கும். எங்கெல்லாம் வெற்றி வாய்ப்பு உள்ளதோ, அதனை தக்க வைக்க பாஜக முயற்சிக்கிறது. தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு 100 சதவீதம் ஒத்துழைப்பு வழங்குவோம்” என்றார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான்.
2 ஆம் தர குடிமக்களாக மாறும் அபாயம்
“நாடு இன்று மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. மக்கள்தொகை அபராதக் கொள்கையை அமல்படுத்த பாஜக நினைக் கிறது. இந்த தொகுதி மறுவரையறை விவகா ரத்தில், தென் மாநிலங்கள், ஒடிசா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் ஒன்றாக இணைந்து நிற்கின்றன. கடந்த 1971 ஆம் ஆண்டு நாடு குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பியது. அதனைத் தென் மாநிலங்கள் எல்லாம் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டின. மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை தெற்கு ஒருபோதும் ஏற்றுக்கொள் ளாது. அப்படி நடந்தால் வடக்கு மாநிலங்கள் நம்மை இரண் டாம் பட்சமாக மாற்றும். தற்போது மக்களவையில் தென் மாநி லங்களின் பிரதிநிதித்துவம் 24 சதவீதம். தொகுதி மறுவரை யறையை நடத்தியே தீர்வது என்று ஒன்றிய அரசு விரும் பினால் மொத்தமுள்ள ஐந்து தென் மாநிலங்களுக் கான மக்களவைப் பிரதிநிதித்துவத்தை 30 சதவீதமாக உயர்த்துங்கள்”. தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி.
உரிமைப் போர் இது!
“இந்தக் கூட்டத்தின் மூலம், அரசியல மைப்பைக் காக்கவும் ஜனநாயகத்தை பாது காக்கவும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மாநிலங்களின் உரிமையை நிலைநாட்டவும் ஒன்றிணைந்துள்ளோம். வெற்றியை நோக்கி பயணிப்போம். இந்தப் போராட்டம் வெறும் எண்ணிக்கை யைப் பற்றியது அல்ல; நமது அடையாளம், நமது கலாச் சாரம் மற்றும் நமது பாரம்பரியத்தை பற்றியது. நமக்கு 1,500 ஆண்டுகளுக்கும் மேலாக வரலாறு உள்ளது. இது வடக்கு - தெற்கு இடையேயான போர் கிடையாது. மாநிலங் களின் ஒன்றியம் இந்தியா என்ற தத்துவத்தை மீட்டெடுப் பதற்கான போராட்டம். தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மக்களவைத் தொகுதி எண்ணிக்கை பற்றியது மட்டுமல்ல; கூட்டாட்சியின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை உறுதி செய்வதற்கான முன்னெ டுப்புதான் இந்த கூட்டம். நாம், நிச்சயம் வெற்றி பெறுவோம்”. கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார்.
“இது மாநிலங்களுக்கு செய்யும் அநீதி
” சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவ டிக்கைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள நவீன் பட்நாயக் அழைக்கப்பட்டிருந்தார். கூட்டத்தில் நேரில் கலந்து கொள்ளாத அவர், காணொலி மூலம் உரையாற்றினார். அவர் தனது உரை யில், “இது ஒரு முக்கியமான கூட்டம். கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகியவை மக்கள் தொகையை கட்டுப்படுத்து வதில், சிறப்பாக செயல்பட்டுள்ளன. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் இந்த மாநிலங்கள் சாதித்திருக்கா விட்டால், இந்தியாவில் மக்கள்தொகை வெடிப்பு ஏற்பட்டி ருக்கும். இது நமது நாட்டின் முன்னேற்றத்தைத் தடம் புரளச் செய்திருக்கும். மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுவரையறை செய்வது நியாயமற்றது. ஒடிசா மக்களின் நலன்களைப் பாதுகாக்க பிஜு ஜனதா தளம் எல்லாவற்றையும் செய்யும். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஒன்றிய அரசு விரி வான கலந்துரையாடலை மேற்கொண்டு சந்தேகங்களைப் போக்க வேண்டும்.” ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்.
ஒன்றிய அரசின் திட்டமிட்ட தாக்குதல்
“நாட்டின் முன்னேற்றத்துக்காகவே மக்கள்தொகை கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்பதற்காக, நம் மாநி லங்கள் பல்வேறு திட்டங்களை வகுத்து, விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, நாட்டின் நோக்கமான மக்கள்தொகை கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளோம். இதற்காக, நம்மை பாராட்டாமல், நமக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைப்பதுதான் இந்த தொகுதி மறுசீரமைப்பு. இது ஒன்றிய அரசின் திட்டமிட்ட நேரடி தாக்குதல். மக்களவை தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால் நமக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும்”. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
பெரியண்ணன் மனப்பான்மை
கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்ற தெலுங் கானா மாநில பி.ஆர்.எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தொகுதி மறுசீர மைப்பு விவகாரம் மட்டுமல்ல, பல்வேறு விவகாரங்களில் பெரியண்ணன் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளும் ஒன்றிய பாஜக அரசு, பிக் பாஸ் மாதிரி நடந்து கொள்வது சரியான போக்கு அல்ல. ஒன்றிய அரசின் இத்தகைய போக்குகளை இப்போது நாம் பேசவில்லை என்றால் வர லாறு நம்மை மன்னிக்காது” என்றார்.
வரவேற்பு
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தை வர வேற்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருக் கும் ஜார்க்கண்ட் முதலமைச்சர் மந்த் சேரான், வெறும் மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதிகள் மறு வரையறை செய்யப்படுவது நியாயமாகவும் சமமாகவும் இருக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.