states

img

கல்வித் துறையில் மேலும் 360 பேருக்கு வேலை கேரள கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி தகவல்

திருவனந்தபுரம், ஜன.30- கேரள கல்வித் துறை யில் பிஎஸ்சி மூலம் மேலும் 360 பேர் பணியமர்த்தப் பட்டதாக அமைச்சர் வி. சிவன்குட்டி கூறினார். இந்த அரசு வந்த பிறகு எல்பிஎஸ்ஏ/யுபிஎஸ்ஏ பதவிகளில் 1506 நியமனங்கள், எல்பிஎஸ்ஏ மொழிப் பிரிவில் 139 நியமனங்கள், யுபி எஸ்ஏ மொழிப் பிரிவில் 352 நியமனங்கள், சிறப்பு ஆசிரியர்கள் பிரிவில் 112 நியம னங்கள், ஹெச்எஸ்ஏ பிரிவில் 1019 நியம னங்கள், மேல்நிலைப் பிரிவில் 757 நியம னங்கள். இளநிலை, முதுநிலை பிரிவுகளில் 11 நியமனங்கள். 4711 உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. பொதுக் கல்வித்துறையில் கூடுதல் பணி நியமனம் செய்வதற்கான சூழ் நிலை உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் வி.சிவன்குட்டி தெரிவித்தார். காலிப்பணி யிடங்கள் அறிவிக்கப்படாத சூழ்நிலை ஏற் படாமல் பார்த்துக் கொள்வதாகவும் அமைச் சர் வி.சிவன்குட்டி தெரிவித்தார்.