திருவனந்தபுரம்:
கேரளத்தின் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண் ணிக்கை குறித்து மலையாள மனோரமாவில் வெளியான போலிச் செய்திகளுக்கு கேரள கல்வி அமைச்சர் பேராசிரியர்.சி.ரவீந்திரநாத் பதிலளித்துள்ளார். அதில் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள தரமான மாற்றத்தை கேலி செய்ய வேண்டாம் என்று அமைச்சர் தனது முகநூல் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசுப் பள்ளிகளும், நான்குஆண்டுகளில் 6.8 லட்சம் புதியமாணவர்களும் என்கிற தலைப் பிட்டுள்ள அமைச்சரின் பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: பொதுக் கல்வி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நமது அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தியுள்ள விழிபுணர்வு நாடு முழுவதும் உணரப்படுகிறது. கல்வித் தர மேம்பாடு, டிஜிட்டல் அமைப்புகள் வரிசைப் படுத்தல், உட்கட்டமைப்பு மேம் பாடு மற்றும் குழந்தைகள் அணுகல் ஆகியவை நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், ‘பொதுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துவிட்டது’ என்கிற பிரச்சாரம் இந்த நேரத்தில்நல்ல நோக்கங்களுடன் வரவில்லை என்பது தெளிவாகிறது அல்லவா?அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் உள்ள வேறுபாடு குறித்து அறிவியல் ரீதியாக பகுப்பாய்வு செய் யப்பட்டு 2017-2018 ஆம் கல்வி ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. அதாவது,பொதுக் கல்வி பாதுகாப்பு பிரச்சாரம் தொடங்கி ஓராண்டுக்குப் பிறகுஇது வெளியானது. இதற்கான பொறுப்பு பொதுக் கல்வி இயக்குநரகத்தின் புள்ளிவிவரப் பிரிவிடம் உள்ளது. அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் புள்ளிவிவரங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. 1990-1991 முதல் 2019-20 வரையிலான 30 ஆண்டுகளில் கேரளாவின் பள்ளிகளில் மாணவர்களின் எண் ணிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தை புள்ளிவிவரத் துறை முறையாக வெளியிட்டுள்ளது. இந்த விளக்கப்படத்தை ஒரு முறை பார்த்தாலே2018-19 லிருந்துதான் வரைபடத் தின் குறியீடு உயரத் தொடங்குகிறது என்பதை தெளிவாக காணலாம்.
2017 ஜூன் 9 அன்று பொதுக் கல்வி இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அந்த ஆண்டில்முதல் வகுப்பில் மட்டும் 12,198 மாணவர்களும், இரண்டு முதல்ஒன்பது வரையிலான வகுப்புகளில்1.45 லட்சம் புதிய மாணவர்களும்சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. (இந்த அதிகரிப்பு பின்னர்1.57 லட்சமாக மாறியுள்ளது) அதற்கு முந்தைய ஆண்டில் முதல்வகுப்பில் 4512 மாணவர்கள் குறைந்ததை கருத்தில் கொண் டால், முதல் வகுப்பில் மட்டும்16,710 மாணவர்கள் அதிகரிப்புஎன்பது தெளிவுபடுத்தப்பட்டுள் ளது. பொதுக் கல்வித்துறையில் கடந்த பத்து ஆண்டுகளில் முதல் முறையாக மாணவர்களின் எண்ணிக்கை இந்த அளவு அதிகரித் துள்ளது.
அடுத்த ஆண்டின் ஆறாவது வேலை நாள் நிறைவு குறித்த அறிக்கை 2018 ஜூன் 22 அன்றுவெளியிடப்பட்டபோது, அந்த ஆண்டில் 1.86 லட்சம் புதிய மாணவர்கள் இரண்டு முதல் ஒன்பதாம் வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். அதன்படி முதல் வகுப்பில் மட்டும் மாணவர்களின் எண்ணிக்கை 10,078 அதிகரித்துள்ளது அதாவது இந்த இரண்டு ஆண்டுகளில் 3.3 லட்சம் மாணவர்கள் புதிதாக அரசுப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். 2019-20இல் 1.64 லட்சமாகவும், 2020-21 ஆம் ஆண்டு 1.77 லட்சமாகவும் அதிகரித்துள்ளது, இவ்வாறு 2017 முதல் நான்கு ஆண்டுகளில் 6.8 லட்சம் புதிய மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.2017 ஜுன் முதல் கடந்த நான்குஆண்டுகளாக மிகவும் துல்லியமாக வெளியிடப்பட்டும், ஒட்டுமொத்த பள்ளிகளின் ஒவ்வொருவகுப்பிலும் ஆண்-பெண் உட்படமாணவர்களின் எண்ணிக்கை இணையதளத்தில் தொடர்ந்துபொதுமக்களுக்கு கிடைத்துவருகிறது. உண்மை இவ்வாறு இருக்கஅதற்கு மாறான பிரச்சாரத்தை மேற்கொள்பவர்கள் பொதுக்கல்வித் துறை சிறப்பாக செயல்படுவதால் ஏமாற்றமடைந்தவர்கள் என்றே கருத வேண்டும்.சனியன்று (மார்ச் 13) மலையாள மனோரமாவில் வெளியிடப் பட்ட புள்ளிவிவரங்களின்படி, 2015-16இல் 33.67 லட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 2019-20இல் 33.27 லட்சமாக குறைந்துள்ளது என்கிற தகவல் உள்ளது.
இந்தபுள்ளிவிவரங்களைப் பார்த்தாலும், அரசு அடிப்படையாக எடுத்துக்கொண்ட 2016-17 ஆம் ஆண்டில் மொத்த மாணவர்களின் எண் ணிக்கை 32,89811 ஆகும். (2017-18இல் 32,67506, 2018-19இல்32,99855, 2019-20இல் 33,27038)2020-21இல் பொதுப் பள்ளியில் படிப்பவர்களின் மொத்த எண்ணிக்கை புதிதாக சேர்ந்தவர்கள் அல்லாது 33,77594 என வளர்ந் துள்ளது இது அதிகரிப்பா? குறைவா? என்பதை தெரிந்துகொள்ள ஒன்றாம் வகுப்பு மாணவனால்கூட முடியும் என்பதே அரசாங்கத்தின் உறுதியான பதில்.2018, 2019 ஜுலை மாதங்களில் பொதுக்கல்வித்துறையின் வித்யாரங்கம் மாத இதழில் வெளியிடப் பட்ட புள்ளிவிவரத் துறை இணை இயக்குநரின் கட்டுரையில் மூன்று ஆண்டுகளில் 5.04 லட்சம் புதிய மாணவர்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://education.kerala.gov.in/downloads/ என்கிற இந்த இணைப்பில் உள்ள கட்டுரைகளில் விவரங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இதோடு 2020-21க்கான சமீபத்திய புள்ளிவிவரங்கள் sametham.kite.kerala.gov.in போர்ட்டலிலும் கிடைக்கின்றன.
அனைத்து மோசமான பிரச்சாரங்களையும் கடந்து, பொதுக் கல்வி அரங்கம் மேலும்வலுவாக வளரும் என்றும், பொதுக்கல்விப் பாதுகாப்பு பிரச்சாரத்தின் ஐந்தாம் ஆண்டான அடுத்த ஜூன்மாதத்தில் வரைபடத்தின் குறியீடுமீண்டும் உயரும் என்பதில் பொதுக்கல்வியை நேசிக்கும் அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது. இத்தகைய புள்ளி விவரங்களைப் பார்க்காமல், தங்கள் சொந்த நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற் றத்தை கேலி செய்ய வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.