எம்புரான் பட இயக்குநரும், நடிகருமான பிரித்விராஜுக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
எம்புரான் பட தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலனின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நேற்று முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியும், அவரிடம் விசாரணையும் நடத்தி வருகிறது. இந்த நிலையில், எம்புரான் பட இயக்குநரும், நடிகருமான பிரித்விராஜுக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடுவ, கோல்டு, ஜன கண மன ஆகிய படங்களை தயாரிப்பாளராக இருந்த பிரித்விராஜுக்கு இப்படங்கள் மூலம் கிடைத்த வருமானம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதாக ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் அமைப்புகள் படக்குழுவினருக்கு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.