states

img

மத்தியப்பிரதேசத்தில் விஷவாயு தாக்கி 8 பேர் உயிரிழப்பு!

மத்தியப்பிரதேசம்,ஏப்.04- கிணற்றை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசம் காந்த்வா மாவட்டம் அருகே 150 ஆண்டுகள் பழமையான கிணற்றைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கியதில் தொழிலாளர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அம்மாநில அரசு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.