கூட்டாட்சி சலுகையல்ல, அரசியலமைப்பு தந்த உரிமை!
மாநிலங்களின் ஒற்றுமையால் உருவானதே இந்தியா
கூட்டாட்சியைப் பாதுகாப்ப தற்கான, அரசியல் சாசன நீதிக்காக நாம் ஒன்றுபட்டுப் போராடுவோம்” என்று கர்நாடக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் எம்.சி. சுதாகர் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாட்டின் ஒரு பகுதி யாக வியாழனன்று ராஜா முத்தையா மன்றத்தில், ‘கூட்டா ட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடை பெற்றது. இக்கருத்தரங்கில் கர்நாடக மாநில அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் பேசியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாட்டை ஒட்டி, ‘கூட்டாட்சி கோட்பாடு இந்தியா வின் வலிமை’ என்ற தலைப்பில் நடத்தப்படும் கருத்தரங்கிற்கு கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா வாழ்த்து தெரி வித்துள்ளார். 71 ஆண்டுகளில் இல்லாத கூட்டாட்சி மீதான தாக்குதல் ஒன்றிய அரசின் கூட்டாட்சி கொள்கைக்கு எதிரான செயல் பாட்டின் காரணமாக 7 மாநில அரசுகள் பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. 71 ஆண்டு காலத்தில் தற்போது தான் கூட் டாட்சி தத்துவத்துக்கு எதி ராக அதிகபட்ச தாக்குதல் தொ டுக்கப்பட்டுக் கொண்டிருக்கி றது. இதற்கு எதிராக தனித்தனி யாக இல்லாமல் அனைவரும் ஒன்றுபட்டுப் போராட வேண் டும். நமது அரசியல் அமைப் பில், ‘கூட்டாட்சி கோட்பாடு’ என்பது ஏதோ ஒரு வாய்ப்பு என்ற அடிப்படையில் சேர்க்கப்பட்ட தல்ல. இது அரசியல் சாசனத் தின் முக்கியமான அம்சமாகும். மாநில அரசுள் உள்ளாட்சி அமைப்புகளல்ல! பாஜக அரசின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள மாநில அரசு கள் சுயமரியாதை, சமூக நீதி அடிப்படையில் ஒன்றுபட்டுள் ளன. கூட்டாட்சி மீது தாக்குதல் தொடுப்பது வெறும் கொள்கை பிரச்சனை சார்ந்தது அல்ல. இது ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும், மாநில அரசுகளை வெறும் உள்ளாட்சி அமைப்புகளாக சுருக்கக் கூடிய தாகவும் உள்ளது. ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பது, நமது கூட்டாட்சியைப் பாதுகாக்கும். ஆனால் ஒன்றிய அரசு உள்நோக்கத்துடன் மாநில அரசின் உரிமையைப் பறித்து, அதிகாரத்தை மேலி ருந்து திணிக்கிறது. மாநிலங்க ளில் கல்வி முதல் சுகாதாரம் வரை, விவசாயம் முதல் வர்த்த கம் வரை, மக்கள் நலத் திட் டங்கள் என ஒன்றிய அரசின் நட வடிக்கையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கூட்டாட்சி நிர்வாக ஏற்பாடல்ல அரசியலமைப்பின் அடிப்படை நமது நாடு பூகோள அடிப் படையில் ஏராளமான மொழி, பண்பாடு, வரலாறுகளைக் கொண்டுள்ளது. குமரி முதல் காஷ்மீர் வரை, குஜராத் முதல் நாகாலாந்து வரை ஒவ்வொரு மாநிலமும் எத்தனை அடையா ளங்களுடன் உள்ளன. கூட் டாட்சி மூலம் தான் இது பாது காப்பாக இருக்க முடியும். கூட்டா ட்சி என்பது அதிகாரத்திற்கான நிர்வாக ஏற்பாடு அல்ல. இந்தியா மேலிருந்து கட்டப்பட்டது அல்ல, மாநிலங்களின் ஒற்று மையால் உருவானது. ஆனால், தற்போதைய ஒன்றிய அரசின் கூட்டாட்சிக்கு எதிரான நடவ டிக்கை அம்பேத்கர், நேரு, ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோர் கண்ட கனவுக்கு எதிரானது. அரசியல் சாசனம் மிகக் கவனமாக உருவாக்கப்பட்டது. அரசியல் சாசனத்தின் பல்வேறு பிரிவுகள் மாநிலங்களுக்கான அதிகாரத்தை வரையறுத்துள் ளன. மாநிலங்கள் உரிமையை இழந்தால் அது அதிகாரத்தை இழப்பது மட்டுமல்ல, அரசியல் சாசனத்தையும் இழந்து விடு வோம். மாநில மக்கள் இரண் டாம் தர குடிமக்களாக மாற்றப் படுவர். கேட்பது, சலுகையல்ல; எங்களின் உரிமை! கர்நாடகத்திற்கு வறட்சி நிவா ரண நிதியாக ரூ. 18 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று 2023 - 24 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசிடம் கோரினோம். ஆனால் அவர்கள் தரவில்லை. இதனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, ஒன்றிய அரசு ரூ.3,454 கோடி வழங்கியாக வேண்டும் என்ற உத்தரவை பெற்றோம். மாநில உரிமையை ஒன்றிய அரசு பறிக்கும்போது, அதைத் தடுப்பது மட்டுமல்ல, அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். ‘எங்களு க்கு சலுகை காட்டுங்கள்’ என்று கேட்கவில்லை, ‘எங்களுக்கு ரிய நியாயத்தை வழங்குங்கள்’ என்று கேட்கிறோம். மாநிலங்க ளுக்கு அதிக அதிகாரம், மாநி லங்களுக்கு இடையிலான மன்றத்தை கூட்டுவது ஆகிய வற்றை முறையாக நடை முறைப்படுத்த வேண்டும். இந்தப் பிரச்சனையில் அரசியல் சாசன நீதிக்காக அனைவரும் ஒன்று சேர்ந்து நின்று, ஒன்றாக பேசி, ஒன்றாக செயல்படு வோம். இவ்வாறு கர்நாடக மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் பேசினார்.