சிபிஎம் அகில இந்திய மாநாட்டில் தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு, மதுரையில் சீத்தாராம் யெச்சூரி நகரில் (தமுக்கம் மைதானம்), ஏப்ரல் 2 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் நாடு முழுவதுமிருந்து, 729 பிரதிநிதிகளும் 79 பார்வையாளர்களும் பங்கேற்றுள்ளனர். இதில், தமிழ்நாட்டிலிருந்து 50 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டு விவாதத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டில் நடைபெறும் அரசியல் ஸ்தாபன அறிக்கை மீதான விவாதத்தில், தமிழகத்தின் சார்பில் எஸ். நூர்முகமது, ஜி. செல்வா, ஆர். கோமதி, புதுச்சேரி மாநிலத்திலிருந்து, மாநிலச் செயலாளர் ஆர். ராமச்சந்திரன், அந்தமான் நிகோபார் தீவுகளின் பிரதேச செயலாளர் அய்யப்பன், கர்நாடக பிரதிநிதி மீனாட்சி சுந்தரம் பேசினார்.