tamilnadu

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மழையால் குளிர்ந்த நாமக்கல்

நாமக்கல், ஏப்.4- நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக  மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளுமையான கால நிலை நிலவியது. தமிழ்நாடு முழுவதும் வெயில் சுட்டெரித்து வந்த நிலை யில், கடந்த இரு தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து  வருவது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு சுற்றுவட்டார பகுதிகளான பட்டறைமேடு, கொல்லப் பட்டி, கூட்டப்பள்ளி, கைலாசம்பாளையம், மாணிக்கம்பா ளையம், மல்லசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வியாழனன்று காலை முதல் கனமான மழையும், விட்டு விட்டு  மிதமான மழையும், தொடர்ந்து சாரல் மழையும் பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவு வதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  இதேபோன்று கோவை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்த தில், வெப்பம் தனிந்து குளிர் காற்று வீசியது

.அச்சு வெல்லம் விலை உயர்வு

நாமக்கல், ஏப்.4- பிலிக்கல்பாளையம் சந்தையில் நடைபெற்ற ஏலத்தில் அச்சு வெல்லம் விலை உயர்வடைந்தும், உருண்டை வெல் லம் விலை சரிவடைந்தும் காணப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டத்தில் ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபி லர்மலை, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடை யாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்பு களை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து  உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச்  சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். இதன்பின்  அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, பிலக்கல்பாளையத்தில் உள்ள வெள்ள சந்தைக்கு கொண்டு வருகின்றனர். வாரந்தோறும் சனி மற்றும் புதன் கிழமைகளில் நடைபெறும் சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல் கின்றனர். அதன்படி, தற்போது நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1400 வரையிலும், அச்சு  வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1440 வரையிலும் ஏலம் போனது. கடந்த ஏலத்தை காட்டிலும், தற்போது அச்சு வெல்லம் விலை  உயர்ந்தும், உருண்டை வெல்லம் விலை சரிந்தும் ஏலம் போனது.

வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை

உதகை, ஏப்.4– நீலகிரி மாவட்டத்தின் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், உதகை அருகேயுள்ள பிங்கர் போஸ்ட் அண்ணா  நகர் பகுதியில் ஒரு சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வளர்ப்பு நாயை வேட்டையாடிச் சென்ற சம்பவம் சிசிடிவியில் பதிவானது. இதனால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. உதகை, பிங்கர் போஸ்ட் அண்ணா நகர் பகுதியில் புத னன்று இரவு, ஒரு குடியிருப்பின் முன்புறம் கூண்டுக்குள் வைக்கப்பட்டிருந்த வளர்ப்பு நாயை, சிறுத்தை திடீரென தாக்கியது. சிறுத்தை நாயை வாயில் கவ்வியவாறு வேட்டை யாடிச் செல்லும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டி ருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  குடியிருப்புப் பகுதிகளில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் அடிக்கடி திரிந்து கொண்டிருக்கும் நிலையில், அவற்றின் நடமாட்டத்தை கண் காணித்து, கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நீலகிரி மலைப்பகுதி களில் வனவிலங்குகளின் நகர்வு அதிகரித்துள்ளதால், உதகை, கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் வனத் துறை அதிகாரிகள் மக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி யினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “சிறுத்தைகளின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு மேற்கொண்டு, தேவையான நடவ டிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளனர்.

போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

சேலம், ஏப்.4- கோடை விடுமுறையை முன்னிட்டு, பெங்களூருவிலி ருந்து திருவனந்தபுரத்துக்கு, போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏப்.4 முதல் மே 30 ஆம்  தேதி வரை பெங்களூருவிலிருந்து வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்குப் புறப்படும் பெங்களூரு - திருவனந்தபுரம்  வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06555) மறுநாள் பிற்பகல் 2  மணிக்கு திருவனந்தபுரத்தைச் சென்றடையும். மறு மார்க்கத்தில் ஏப்.6 (நாளை) முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  திருவனந்தபுரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல்  2.15 மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் -பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06556) மறுநாள் காலை 7.30  மணிக்கு பெங்களூருவைச் சென்றடையும். இந்த ரயிலானது, கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப் பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணா குளம் டவுன், கோட்டயம், சங்கணாச்சேரி, திருவல்லா, செங் கண்ணூர், மாவேலிக்கரை, காயங்குளம், கொல்லம், வர்கலா  உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும், என தெரி விக்கப்பட்டுள்ளது.

போதை மாத்திரை கடத்தல்: 4 பேர் கைது

கோவை, ஏப்.4– கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்து வந்த நால்வரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.  கோவை மாநகரில் போதைப் பொருட்களின் விற்ப னையை தடுக்க மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர். இந்நிலை யில், கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி எதிரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவ தாக உளவுத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது  சந்தேகத்திற்கிடமான நால்வரை போலீசார் தடுத்து நிறுத்தி  விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணான பதில் கள் அளித்ததால், போலீசார் அவர்களை சோதனை செய்த னர். அப்போது அவர்களிடம் 1,556 போதை மாத்திரைகள் இருப் பது தெரியவந்தது. போலீசார் விசாரணையில், கிஷோர் (27.  தினேஷ் (25) அஜய் பெலிக்ஸ் (25) சூர்யா (19) என்பது  தெரியவந்தது. மேலும், இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்திற்கு  சென்று போதை மாத்திரைகளை ரயில் மூலம் கொண்டுவந்து  கோவையில் விற்பனை செய்து வந்ததாக போலீசார் தெரி வித்தனர். இதனைத்தொடர்ந்து, போதை மாத்திரைகளை பறி முதல் செய்த போலீசார், நால்வரையும் கைது செய்து, நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி, சிறையில் அடைத்தனர்