tamilnadu

img

சிபிஎம் அகில இந்திய மாநாட்டை நடத்தும் குழுக்கள்

சிபிஎம் அகில இந்திய மாநாட்டை நடத்தும் குழுக்கள்

சீத்தாராம் யெச்சூரி நகர், ஏப்,4- மதுரையில் சீத்தாராம் யெச்சூரி நகரில் (தமுக்கம் மைதானம்) நடை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. மாநாட்டு தலைமைக்குழு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார் தலை மையிலான மாநாட்டை வழி நடத்தும் குழுவில் எம்.ஏ. காபார், விக்ரம் சிங், புத்தலத்து தினேசன், கே.பாலபாரதி, மீனாட்சி முகர்ஜி, வினோத் நிக்கோலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  அரசியல் தலைமைக்குழு வழி நடத்தும் குழுவாக செயல்படும். தீர்மானக்குழு அசோக் தாவ்லே தலைமை யிலான மாநாட்டு தீர்மானக் குழுவில்  பி. ராஜீவ், மரியம் தாவ்லே, விஜூ கிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தகுதி ஆய்வு படிவக்குழு முரளிதரன் தலைமையிலான தகுதி ஆய்வு படிவக் குழுவில் சி.எஸ். சுஜாதா, சமிக் லகிரி, டி. ஜோதி ஆகி யோர் இடம் பெற்றுள்ளனர். மினிட்ஸ் குழு கே.என். யுமேஷ் தலைமை யிலான மினிட்ஸ் குழுவில் பிராச்சி ஹட்வில்கர், பி.வி. அனியன், மயுக் பிஸ்வாஸ், எம். அனில் குமார், ஆதர்ஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.