திருவனந்தபுரம்:
கோவிட் 19 நோய் தொற்று தொடர்பான ஐசிஎம் ஆரின் மூன்றாவது பூஜ் ஜிய ஆய்வு அறிக்கை பெறப்பட்டதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவிட் தொற்று வந்து சென்றது குறித்த விவரங்களை அறிய ஐசிஎம்ஆர் ஆன்டிபாடி சோதனைகளை நடத்தியது. இதற்காக ஜீரோ கண்காணிப்பு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு 2020 மே, ஆகஸ்ட்மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத் தப்பட்டது. அதன்படி மாநிலத்தில் கோவிட் வந்து சென்றது தேசிய சராசரியில் பாதி மட்டுமே. தேசிய அளவில்,கோவிட் வந்து சென்றது 21 சதவிகிதத்திலும், கேரளத்தில் 11.6 சதவிகிதத்திலும் உள்ளது. கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு காரணம், மாநிலத்தின் சிறந்த ஆய்வுகள், தொடர்புத் தடமறிதல், கண்காணித்தல் மற்றும் தனிமைப்படுத்தல் எனஅமைச்சர் கூறினார்.
மூன்றாம் கட்ட பூஜ்ஜிய கண்காணிப்பு ஆய்வு கேரளாவின் திருச்சூர்,எர்ணாகுளம், பாலக்காடு மாவட்டங்களில் நடத்தப்பட்டன. 1244 ஆன்டிபாடி சோதனைகள் செய்யப்பட்டன. அவர் களில், 11.6 சதவிகிதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மே மாதத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முதல் கட்டத்தில், 0.33 சதவிகிதம் பேர்கோவிட் தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர். இந்தியாவில் இது 0.73 சதவிகிதமாக இருந்தது. ஆகஸ்டில் நடத்தப் பட்ட இரண்டாம் கட்ட ஆய்வில், பதிலளித்தவர்களில் 0.8 சதவிகிதம் பேர்கோவிட் பாதிக்கட்டவர்கள், இந்தியாவில் இது 6.6 சதவிகிதமாக இருந்தது.கேரளாவில் கோவிட் வந்து சென்றவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. என்றாலும் மக்கள் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். முககவசங்கள் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை பராமரிக்க வேண்டும், கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அமைச்சர் கூறினார்.