states

img

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது... எம்.வி.கோவிந்தன்....

செங்ஙன்னூர்:
ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதி வழங்க கேரளாவுக்கு அதிகாரம் இல்லை என்றும், மத்திய அரசால் மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் எம்.வி.கோவிந்தன் தெரிவித்தார்.தென் கேரளத்தில் நடந்து வரும்வளர்ச்சி மேம்பாட்டு பிரச்சார இயக்கத்தின் பகுதியாக திங்களன்று செங்ஙன்னூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் எம்.வி.கோவிந்தன் மேலும் கூறியதாவது:  

ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதி வழங்கும் அதிகாரம் கேரளத்திற்கு இல்லை. மத்திய அரசால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் நிலையில் எதிர்கட்சி தலைவரின் குற்றச்சாட்டு அரசாங்கத்திற்கு எதிரான முட்டாள்தனம். கேரளம் அதை அனுமதிக்காது. குற்றச்சாட்டுகளை கூறி இடது ஜனநாயக முன்னணிக்கான ஆதரவு நிலையிலிருந்து  மீன்பிடி தொழிலாளர்களை விலக்க எதிர்கட்சி முயற்சிக்கிறது. விண்ணப்பத்தையும் ஒப்பந்த த்தையும் வேறுபடுத்தி அடையாளம் காண முடியாதவர்கள் பற்றி என்ன கூறுவது என்று எம்.வி.கோவிந்தன்கேட்டார்.

கோவிட்டில் கேரள அரசு நல்ல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. நெருக்கடி காலகட்டத்தில் ஆட்சியாளர்கள் தங்களது திறனை வெளிப்படுத்த வேண்டும். பினராயி விஜயன் அவ்வாறு வெளிப்படுத்திய தலைவராவார். மதச்சார்பின்மையை உயர்த்திப்பிடிக்கும் அரசு கேரளத்தில் அமைய வேண்டும். அதற்கு ஆட்சித் தொடர்ச்சி அவசியமாகும். ஏழை எளிய சாதாரண மக்களுக்கானதுதான் இடது ஜனநாயக முன்னணி அரசு. இந்த அரசு வந்தால் நல ஓய்வூதியம் மேலும் உயர்த்தப்படும். அனைத்தையும் தவறாக சித்தரிப்பது எதிர்க்கட்சியின் நிலைப்பாடு. இந்த அணுகுமுறையை தலைமைச்செயலகத்தின் முன் நடந்த போராட்டத்தின் பின்னணியில் காணலாம் என எம்.வி.கோவிந்தன் கூறினார்.பயணக்குழுவில் இடது ஜனநாயக முன்னணி தலைவர்கள் பி.வசந்தம் (சிபிஐ), தாமஸ் சாழிக்காடன் எம்.பி., வி.சுரேந்திரன் பிள்ளை (எல்ஜேடி), எம்.வி.மணி (கேசிபி), அப்துல் வஹாப் (ஐஎன்எல்), ஷாஜிகடமலா (கேரள காங். ஸக்கேரியா), ஜார்ஜ் அகஸ்டின் (ஜனநாயக கேரளாகாங்.) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.