திருவனந்தபுரம்:
கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியா கண்டறியப்பட்டுள்ளதால் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு மக்களை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா கேட்டுக் கொண்டார்.
கைகளை நன்கு கழுவ வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்த பின்னரே பயன்படுத்த வேண்டும். ஷிகெல்லா உறுதிசெய்யப்பட்டவுடன் சுகாதாரத் துறை தலையிட்டது. மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து கிணறுகளும் சூப்பர் குளோரினேட் செய்யப்பட்டன. சுகாதாரத் துறை அளிக்கும் அனைத்துஅறிவுறுத்தல்களையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
முந்தைய ஆண்டுகளில் ஷிகெல்லா சிலபகுதிகளில் அடிக்கடி காணப்பட்டது. இந்தபாக்டீரியாக்கள் நீர் வழியாக மனிதர்களைசென்றடைகின்றன. ஷிகெல்லா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து வெளியேறும் பாக்டீரியா தண்ணீரில் கலந்தால், அந்த தண்ணீரைக் கொதிக்கவைத்து பயன்படுத்தாவிட்டால் மற்றவர்களுக்கு நோய் பரவுகிறது. எனவே, அடர்த்தியான பகுதிகளில் வாழும் மக்கள் கொதிக்க வைத்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.ஷிகெல்லாவால் 11 வயது சிறுவன் இறந்தபோது பாக்டீரியாவின் இருப்பு முதலில்கண்டுபிடிக்கப்பட்டது. இது அதிகமான மக்களுக்கு பரவியது, ஆனால் சரியான நேரத்தில் தலையிட முடிந்தது. 50 க்கும் குறைவான நபர்களின் மாதிரிகள் சோதிக்கப்பட்டன. இந்தவகை பாக்டீரியாக்கள் பொதுவாக குழந்தைகளில் காணப்படுகின்றன. சிலர் பாதிப்பில்லாமல் வீடு திரும்பி வருகிறார்கள், மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார்கள். குடிநீரை சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும், தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பதன் மூலமும் ஷிகெல்லா நெருங்காமல் தடுக்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.