states

img

அபிமன்யு படுகொலை.... குழந்தைகள் உரிமை ஆணையம் விசாரணை....

ஆலப்புழா:
10 ஆம் வகுப்பு மாணவர் அபிமன்யுவின் கொலை வழக்கில் குழந்தைகள் உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது. மலையாள புத்தாண்டு தினமான விஷு நாளில் ஆர்எஸ்எஸ் குண்டர்களின் கத்திக்குத்தில் ஆலப்புழா மாவட்டம் வள்ளிகுந்நம் கோயில் வளாகத்தில் வைத்து அபிமன்யு(15) கொல்லப்பட்டார். சனியன்று அவரது வீட்டிற்கு வந்த ஆணைய அதிகாரிகள் அவரது உறவினர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட இரண்டு தாக்குதல்கள் குறித்து குடும்ப உறுப்பினர்கள் ஆணையத்தின் முன் சாட்சியமளித்தனர்.

கோயில் திருவிழா நடந்த நாளில் காவல்துறையினர் அலட்சியம் காட்டினர். வல்லிகுந்நம் காவல் ஆய்வாளரை விசாரணைக் குழுவிலிருந்து நீக்க வேண்டும் என்றும் குடும்ப உறுப்பினர்கள் கோரினர். 18 வயதுக்கு உட்பட்ட சிறுவனின் கொலை என்பதால் வழக்கின் அனைத்து நடவடிக்கைகளிலும் குழந்தைகள் உரிமை ஆணையத்தின் கவனம் இருக்கும் என ஆணையத்தின் தலைவர் வி.மனோஜ்குமார் தெரிவித்தார். தாக்குதலில் காயமடைந்தவர்களிடமிருந்து வாக்குமூலம் எடுக்கப்படும். காவல்துறைக்கு பின்னடைவு ஏற்பட்டால், விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார். காவல் ஆய்வாளர் மிதுன் வரவழைக்கப்பட்டு கமிஷன் தலைவர் தகவல் கோரினார். ஆணைய உறுப்பினர் சி விஜயகுமார் உடனிருந்தார்.