states

img

ஆபாச வீடியோவில் சிக்கிய எடியூரப்பா... மிரட்டியே பலர் அமைச்சர் ஆகின்றனர்.... பாஜக எம்எல்ஏ பி.ஆர். பாட்டில் புதிய தகவல்....

பெங்களூரு:
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் ஆபாச வீடியோஒன்று எம்எல்ஏ-க்களின் கைகளுக்கு கிடைத்துள்ளதாகவும், அதை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியே, பலர் அமைச்சர் பதவி பெற்று வருவதாகவும் மத்திய முன்னாள் பாஜக அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏ-வுமான பி.ஆர். பாட்டில் யத்னால், விவகாரமான குற்றச்சாட்டை முன்வைத்துள் ளார்.

“எடியூரப்பா சம்பந்தப்பட்ட ஒரு ஆபாச சி.டி. அவரது சொந்தஉறவினரால் அவரது வீட்டில்வைத்து பதிவு செய்யப்பட்டுள் ளது. இப்போது அமைச்சர் பதவி கிடைத்த சிலருக்கு ஏற் கெனவே அந்த சிடி கிடைத்தது. அதை வெளியிட்டு விடுவோம் என்று எடியூரப்பாவை மிரட்டி அவர்கள் தங்களுக்கு அமைச்சர்பதவிகளை பெற்றுக் கொண் டுள்ளனர். இந்த ஆபாச சி.டி.க்கள் சிலகாங்கிரஸ் மூத்த எம்எல்ஏ-க் களுக்கும் கிடைத்துள்ளது. அவர்களும் இதைக் காட்டி மிரட்டிமிரட்டித்தான் தங்கள் தொகுதிக்கு கூடுதலாக அரசின் நிதியைபெறுகிறார்கள். விரைவில் இந்த சி.டி. பொதுவெளிக்கும் வரத்தான் போகிறது” என்று யத்னால் தெரிவித்துள்ளார்.இதே குற்றச்சாட்டை, பாஜகமேலவை உறுப்பினர் விஸ் வாத்தும் எழுப்பியுள்ளார்.கர்நாடக அமைச்சரவையை மாற்றியுள்ள எடியூரப்பா, புதிதாக 7 பேருக்கு அமைச்சர் பதவிவழங்கியுள்ள நிலையிலேயே இந்த குற்றச்சாட்டு எழுந்துள் ளது.