states

img

காவிக் கொடியை இறக்கி மீண்டும் தேசியக்கொடியை ஏற்றிய தேசிய மாணவர் சங்கத்தினர்

கர்நாடகாவில் தேசியக்கொடி கம்பத்தில் ஏற்றப்பட்ட காவிக்கொடியை இறக்கி, மீண்டும் தேசியக் கொடியை தேசிய மாணவர் சங்கத்தினர் ஏற்றினர்.

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியகூடாது என சங்-பரிவார மாணவ அமைப்பினர் போராடி வருகின்றனர்.  மேலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால், நாங்களும் காவித்துண்டு அணிந்து வருவோம் என கூறி பல கல்லூரிகளில் இந்துத்துவ மாணவ அமைப்பினர் காவித்துண்டுகளை அணிந்து ஜெய்ஸ்ரீராம் முழக்கமிட்டு மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றனர். இதனால் கர்நாடகா முழுவதும் மேல்நிலை பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

இதற்கிடையில் கர்நாடகா மாநிலம், சிவமோகா மாவட்டத்தில் பர்ஸ் கிரேட் என்ற அரசு கல்லூரியில், நேற்று சங்-பரிவார மாணவ அமைப்பினர் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியக்கொடி ஏற்றும் கம்பத்தில் காவிக்கொடியை ஏற்றினர். இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.  

இந்த நிலையில் இன்று தேசிய மாணவர் சங்கத்தினர், காவிக்கொடியை இறக்கி, மீண்டும் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.