கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தில் உள்ள பெரியபட்னா பகுதியில், செயிண்ட் மேரிஸ் தேவாலயத்தை மர்ம நபர்கள் அடித்து, நொறுக்கி சூறையாடியுள்ளனர்.
கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தில் உள்ள பெரியபட்னா பகுதியில் உள்ள செயிண்ட் மேரிஸ் தேவாலயம் உள்ளது. நேற்று மர்ம நபர்கள் அங்குள்ள குழந்தை இயேசு சிலையை அடித்து நொறுக்கி தேவாலயத்தை சூறையாடியுள்ளனர். மேலும், தேவாலயத்தில் பாதிரியார் இல்லாத நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்த காணிக்கை பெட்டியையும் காணவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தேவாலயம் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவிக்களை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.