states

img

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ சதீஷ் கிருஷ்ணா சாய்ல் கைது!

சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதி தொடர்பான பணமோசடி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல். சதீஷ் கிருஷ்ணா சாய்லை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

2010-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதி வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் எம்.எல். சதீஷ் கிருஷ்ணா சாய்லின் வீட்டில், கடந்த ஆகஸ்ட் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் அமலாக்கத்துறை (ED) சோதனை நடத்தியது. அப்போது, சட்டவிரோத சொத்துகள், பணம், நகைகள் ஆகியவை கண்டறியப்பட்டதாகவும், அதிக அளவில் ரொக்கம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது. இதை தொடர்ந்து, சாய்லுக்கு சொந்தமான சொத்துகளை குறிவைத்து கர்வார், கோவா, மும்பை மற்றும் தில்லி ஆகிய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், கர்நாடக காங்கிரஸ் எம்.எல். சதீஷ் கிருஷ்ணா சாய்லை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

கடந்த 2024 அக்டோபர் 26-ஆம் தேதி, சிறப்பு எம்.பி/எம்.எல். நீதிமன்றம், பெலேகேரி சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதி தொடர்புடைய ஆறு வழக்குகளில் சாய்லுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.44 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

ஆனால், 2014 டிசம்பர் 21-ஆம் தேதி, கர்நாடக உயர்நீதிமன்றம் அவரது தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.