கர்நாடகாவில், அரசுப்பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட 5 திட்டங்களுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அரசு இன்று பொறுப்பேற்ற பிறகு 5 முக்கிய திட்டங்களை நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மாநிலம் முழுவதும் அரசுப்பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 நிதியுதவி, மாதந்தோறும் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ இலவச அரிசி, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், 2 ஆண்டுகளுக்கு வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1500 நிதியுதவி வழங்கப்படும் ஆகிய திட்டங்களை நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.