ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளது. இந்நிலையில்,”தலித்துகள், சிறுபான்மையினர், விவசாயிகள், இளைஞர்கள், பழங்குடியினர், ஏழைகள், குழந்தைகள் மற்றும் பெண்களின் வளர்ச்சிக்கான ரூ.1.36 லட்சம் கோடி நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும்?” என பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மாநிலம் முழுவதும் பேனர் அடித்து பிரச்சாரத்தை துவங்கியுள்ளது.