ராஞ்சி மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல் உள்ளூர் பாஜக நிர்வாகிகள் வரை முஸ்லிம் மக்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சை கக்கி னர். பிரதமர் மோடி ஒரு படி மேலே சென்று, முஸ்லிம் மக்களை “நாட் டில் ஊடுருவியவர்கள்”, “அதிக குழந்தை பெற்றுக்கொள்பவர்கள்” என்றெல்லாம் வெறுப்பைக் கொட் டினார். அமித் ஷாவும் இதே போல முஸ்லிம் மக்களுக்கு எதிராக பேசி வன்முறையை தூண்டினார்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தி லும் மத வன்முறையை தூண்டும் வகையில் அமித் ஷா பேசி யுள்ளார். ஞாயிறன்று ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்ற தேர்தல் வாக்குறுதி அறிவிப்பு பிரச்சாரக் கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில்,”ஊடுருவல்காரர்க ளுக்கு (முஸ்லிம் மக்கள்) ஜேஎம் எம் தலைவரும், ஜார்க்கண்ட் முதல் வருமான ஹேமந்த் சோரன் பாது காப்பு அளித்து வருகிறார். ஹேமந்த் சோரன் ஆட்சியில் ஜார்க்கண்ட் பழங்குடியினர் பாது காப்பாக இல்லை. வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களை மட்டுமே வாக்கு வங்கிகளாக ஹேமந்த் சோரன் பார்க்கிறார். ஊடுருவல்காரர்களால் ஜார்க் கண்டில் பழங்குடியினர் எண்ணிக் கை குறைந்து வருகிறது. மதம் அடிப்படையில் மக்கள்தொகை யும் மாறி வருகின்றது. அதாவது ஊடுருவல்காரர்களின் எண்ணிக் கை கணிசமாக அதிகரித்து வரு கிறது. குறிப்பாக ஊடுருவல்காரர் கள் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வந்து சிறுமிகளை திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால் ஜார்க்கண்ட் நிலம் ஊடுருவல் காரர்களுக்குச் சொந்தமாகிறது. இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் ஜார்க்கண்ட் மாநிலத்தின் கலாச் சாரம், வேலை வாய்ப்பு, நிலம், பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்காது. ஜார்க்கண்டில் பாஜக அரசு வந்தால் ஊடுருவல்காரர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள். சிறு மிகளை திருமணம் செய்த ஊடுரு வல்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலம் மீட்கப்படும். பெண் களை துன்புறுத்துபவர்கள் தலை கீழாக தூக்கிலிடப்படுவார்கள்” என கூறினார்.
வன்முறையை தூண்ட திட்டம்
ஏற்கெனவே அசாம் பாஜக முதல்வரும், ஜார்க்கண்ட் தேர்தல் பொறுப்பாளருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும், தேசிய மக்கள் பதி வேடு, பொது சிவில் சட்டம் அமல் படுத்தப்படும் என வன்முறையை தூண்டி வரும் வகையில் பேசி வருகிறார். முஸ்லிம் மக்களை மறைமுகமாக ஊடுருவல்காரர்கள் எனக் கூறி, வாக்குப்பதிவுக்கு முன் ஜார்க்கண்டில் வகுப்புவாத துருவமுனைப்பை ஏற்படுத்த பாஜக முயற்சித்து வருகிறது.
பாஜக முன்னாள் எம்.பி., பிரிஜ் பூஷணை தலைகீழாக ‘தூக்கிலிடுவாரா’ அமித் ஷா?
ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷா,”ஜார்க்கண்ட் மாநில பெண் களை துன்புறுத்துபவர்கள் தலைகீழாக தூக்கிலிடப் படுவார்கள்” என கூறினார்.
அப்படி என்றால் பாஜக முன்னாள் எம்.பி., பிரிஜ் பூஷண் சரண் சிங் (முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவர்) மல்யுத்தத்தில் இருந்த சிறுமிகளுக்கு எதிராக பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். பிரிஜ் பூஷணின் பாலியல் வக்கிரங்களுக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் முன்னிலையில் மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். பிரிஜ் பூஷண் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதால் இன்று வரை நடவடிக்கை எடுக்காமல் அவரை மோடி அரசு பாதுகாத்து வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜார்க்கண்ட் மாநில பெண்களின் பாதுகாப்பிற்காக பேசியது போல, பாஜக முன் னாள் எம்.பி., பிரிஜ் பூஷணை தலைகீழாக தூக்கிலிடுவாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.