ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கான சிபு சோரனின் அர்ப்பணிப்பு மிகுந்த செயல்கள் எப்போதும் நினைவு கூறப்படும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருப்போம் என எம்.ஏ பேபி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.