ராய்ப்பூர்:
பிராமணர்களுக்கு எதிராக பேசினார் என்ற அடிப்படையில் சத்தீஸ்கரைச் சேர்ந்த 86 வயது முதியவர் நந்தகுமார் பாகேல் அண்மையில் கைதுசெய்யப்பட்டார். ‘‘இந்தியாவில் உள்ள அனைத்துகிராம மக்களிடமும் நான் ஒன்றை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.பிராமணர்களை உங்கள் கிராமத்துக்குள் அனுமதிக்காதீர்கள். நாம் அனைவரும் பிராமணர்களை புறக்கணிக்க வேண்டும். அவர்களைமீண்டும் வோல்கா நதி பகுதிக்கே திருப்பி அனுப்ப வேண்டியது அவசியம்’’ என பேசியதாகவே நந்தகுமார்பாகேல் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது 153A (பல்வேறு சமூகத்தினருக்குள் பகைமையை உருவாக்குதல்), 505(1) (B) (உள்நோக் கத்துடன் பயத்தை ஏற்படுத்துதல்) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதன்அடிப்படையில் நந்தகுமார் பாகேல்தற்போது சிறையிலும் அடைக்கப் பட்டுள்ளார்.இவ்வளவுக்கும் நந்தகுமார் பாகேல், வெறுமனே ஒரு முதியவர் மட்டுமல்ல, அவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தீஸ்கர் முதல்வரானபூபேஷ் பாகேலின் தந்தை ஆவார். எனினும், ‘ஒரு மகனாக எனதுதந்தையை மதிக்கிறேன். ஆனால் ஒரு முதலமைச்சராக, சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையிலானஎனது தந்தையின் கருத்துகள் மற்றும்தவறுகளை என்னால் மன்னிக்க முடியாது; சட்டம் அனைவருக்கும் சமம்’ என்று கூறி, பூபேஷ் பாகேலே,தந்தை நந்தகுமார் பாகேலை கைதுசெய்ய உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில்தான், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நந்தகுமார் பாகேல்,சாதி ஆதிக்கம் மற்றும் இந்துத்துவாவுக்கு எதிராக தொடர்ந்து சமூகநீதியைப் பேசி வருபவர் என்பதும், அதனைத் தனது கொள்கையாகவே கொண்டிருப்பவர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.சத்தீஸ்கர் மாநிலம் குருத்தி கிராமத்தில் வசித்து வரும் நந்தகுமார் பாகேல், ஆரம்பம் முதலே இந்துமதத்தில் இருக்கும் சாதி, தீண்டாமைக்கு எதிராக பேசி வருபவர் என்றுஅவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக் காக எப்போதும் குரல் கொடுப்பவர். இதை தனது வாழ்க்கையாகவே கொண்டிருப்பவர் நந்தகுமார் பாகேல் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்து மதத்தில் இருக்கும் தீண் டாமைக் கொடுமைகளால் மனம் வெறுத்து, டாக்டர் அம்பேத்கரின் வழியைப் பின்பற்றி நந்தகுமார் பாகேலும் 1970-களின் பிற்பகுதியில் புத்த மதத்தைத் தழுவியுள்ளார். 2001-ஆம் ஆண்டு “பிரம்மன் குமார்ராவன் கோ மாட் மர்ரோ” (BrahmanKumar Rawan ko Mat Marro) என்றபுத்தகத்தையும் நந்தகுமார் பாகேல் எழுதியுள்ளார்.தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்து காவியமான இராமாயணத்தில் ராமனால் கொல்லப்பட்ட ராவணனின் உருவ பொம்மைகளை எரிப்பதை நிறுத்த வேண்டும் என்று அந்த புத்தகத்தில் நந்தகுமார் பாகேல் வலியுறுத்தியுள்ளார். இதுஅப்போது சர்ச்சையைக் கிளப்பவே,அன்றைய அஜித் ஜோகி தலைமையிலான மாநில அரசு, இந்தப் புத்தகத்தை தடை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கும் உள்ளாகி இருக்கிறது.
தடைக்கு எதிராக 17 ஆண்டுகளாக நந்தகுமார் பாகேல் போராடியுள்ளார். சத்தீஸ்கர் உயர் நீதிமன்றமோ அவரது மனுவை தள்ளுபடி செய்து விட்டது. எனினும், பிராமணியம், இந்துத் துவத்திற்கு எதிராக பேசுவதை அவர்நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது.2018-இல் காங்கிரஸ் தலைமைக்கு நந்தகுமார் பாகேல் கடிதம்ஒன்றை எழுதியுள்ளார். அதில்,“காங்கிரஸ் சார்பில் 85 சதவிகிதம்பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர்மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களையே தேர்தலில் நிறுத்துங்கள்; பிராமணர்கள், தாக்குர்கள், பனியாக்களை விட்டு விலகி வாருங்கள்”என்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளார்.இதுவும் சர்ச்சையை ஏற்படுத் திய நிலையில், அப்போது காங்கிரஸ்காரியக் கமிட்டியில் இருந்த பூபேஷ்பாகேல், “எனது தந்தையின் கருத்துகாங்கிரஸ் கருத்து அல்ல; எனது தந்தை கட்சியின் உறுப்பினரும் அல்ல!” என்று அறிக்கை வெளியிட்டு ஜகா வாங்கியுள்ளார்.மற்றொரு முக்கியமான சம்பவம், நந்தகுமார் பாகேல் மனைவியின் இறப்பாகும். அப்போது, இந்து முறைப்படி சடங்குகளைச் செய்யக் கூடாது; பவுத்த முறைப்படிதான் நடக்க வேண்டும் என்று நந்தகுமார்பாகேல் கடுமையாக போராடியுள்ளார். ஆனால், மகன் பூபேஷ் பாகேல்அதனை மறுத்து, இந்து முறைப் படியே சடங்குகளை நடத்தியுள்ளார். இதுபோன்ற விஷயங்களில் தனதுமகனுடனேயே அவருக்கு தொடர்ந்து முரண்பாடு இருந்து வந்துள்ளது. அனுசரித்துப் போகுமாறு மகன்கூறும்போதெல்லாம், ‘நான் எனக்குச் சரி என்பதைப் பேசுகிறேன், இதற்காக நான் யார் அனுமதியையும் பெற வேண்டியதில்லை’ என்று கறாராக கூறி வந்துள்ளார். அந்த வகையிலேயே தற்போது சிறைக்கும் சென்றுள்ளார். தன்னை யாரும் ஜாமீனில் எடுக்க வேண்டாம் என் றும் அவர் கறாராக கூறிவிட்டதாக நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.