சிம்லா:
இமாசலப் பிரதேசத்தில் முதல்வரின் பாதுகாவலருடன் போலீசார் மோதலில் ஈடுபட்ட சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை அளிக்குமாறு காவல்துறை டி.ஜி.பி.க்கு முதல்வர் ஜெய்ராம் தாக்குர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. ஜெய்ராம் தாக்குர் முதல்வராக இருக்கிறார். இந்நிலையில் அவர், ஒன்றிய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரியுடன் குல்லு மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.அப்போது பொதுமக்களில் சிலர், கட்காரியை பிரதமர் ஆக்க வேண்டும் என்று முழக்கம் எழுப்பியதாகவும், அதற்கு முதல்வரின் பாதுகாவலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இது ஒருகட்டத்தில், முதல்வரின் பாதுகாவலருக்கும், குல்லு மாவட்ட போலீசாருக்கும் இடையிலான வாக்குவாதமாக மாறிகடைசியில் மோதலில் முடிந்துள் ளது.முதல்வர் ஜெய்ராம் தாக்கூரின்பாதுகாவலரை, குல்லு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங் களில் வைரலானது.இதையடுத்து, பாஜக முதல்வர் ஜெய்ராம் தாக்குர், “குல்லு மாவட்ட விவகாரம் தொடர்பாக மாநிலடி.ஜி.பி. 3 நாட்களில் விசார ணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்” என்று உத்தரவிட்டுள் ளார்.