காந்திநகர்:
கோமியம் குடித்தால் கொரோனா வராது என்றுசங்-பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த 2020 மார்ச் 25 அன்றுமுதன்முதலாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது துவங்கி, தற்போது இரண் டாம் அலையால் நாடே தகனமேடைகளாக மாறிக் கொண் டிருக்கும் போதும், இந்தப் பிரச்சாரத்தை அவர்கள் கைவிடுவதாக இல்லை. உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்திரா சிங், இரண்டு நாட்களுக்கு முன்புகூட, கோமியத்தை எவ்வாறு குடிப்பது என்று வீடியோ போட்டு விளக்கியிருந்தார்.
இந்நிலையில், வடக்கு குஜராத்திலுள்ள டெடோடா என்ற கிராமத்தில் மாட்டுக் கொட்டத்திலேயே (கோசாலை) கொரோனா தடுப்பு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.இந்த மையத்திற்கு வரும் கொரோனா நோயாளிகளுக்குப் பசுவின் பால், நெய் மற்றும் கோமியத்திலிருந்து செய்யப்பட்ட ஆயுர்வேத மருந்து மூலம் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுவதாக கோசாலையின் அறங்காவலர் மோகன் ஜாதவ் என்பவர் தெரிவித்துள்ளார்.இங்கு தற்போது 7 நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இவர்களுக்காக இரண்டு ஆயுர்வேத மருத்துவர்களும், கூடவே இரண்டுஎம்.பி.பி.எஸ். மருத்துவர் களும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.