states

img

நரேந்திர மோடி அரசைக் கண்டு தீவிரவாதிகள் பயப்படுகிறார்கள்..... பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு....

கெவாடியா:
கடந்த 7 ஆண்டுகளில் பெரிய தீவிரவாத தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்றும், மோடி தலைமையிலான பாஜக அரசைக் கண்டு, தீவிரவாதிகள் பயப்படுகின்றனர் எனவும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற கூட்டத்தில் இதனை அவர் கூறியுள்ளார்.

“பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் வெற்றி பெறாத வகையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால்தான், பிரதமா் மோடி பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 7 ஆண்டுகளாக ஜம்மு - காஷ்மீரைத் தவிர நாட்டில் வேறு எந்த பகுதியிலும் பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறவில்லை. தேவைப்பட்டால், பயங்கரவாதிகளை எல்லைத் தாண்டி சென்று அழிக்க முடியும் என்பதை ஊரி தாக்குதல் மூலம் இந்தியா உலக நாடுகளுக்கு உணா்த்தியது. இதனால் பாஜக அரசைக் கண்டு பயங்கரவாதிகள் பயம் அடைந்துள்ளனர்.!” என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.கடந்த 2019-ஆம் ஆண்டு, காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 40 ராணுவ வீரர்கள் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுதான் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெற்றது. 2016-இல் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படைத் தளத்திற்கு உள்ளேயே பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.