states

img

அகமதாபாத்தில் கட்டுமான தலத்தில் லிஃப்ட் விபத்து - 7 தொழிலாளர்கள் பலி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டுமான தலம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 7 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள குஜராத் பலகலைக்கழகம் அருகே  ஏஸ்பயர்-2 (Aspire-2) என்ற பெயர் பலகையுடன் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டுமான தலத்தில், 7வது மாடியிலிருந்து புறப்பட்ட லிஃப்ட்டில் திடீரென அறுந்து விழுந்தது. இதில், லிஃப்டுக்குள் இருந்த 7 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். படுகாயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.