குஜராத் மாநிலத்தில், மாட்டிறைச்சி வைத்திருந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அமரேலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என்பதற்காக அக்ரம் ஹஜி, சட்டர் இஸ்மாயில், காசிம் சொலான்கி ஆகிய 3 பேர் பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் அம்மாநில போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்து தற்போது, மாட்டிறைச்சி வைத்திருந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அமரேலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட மூவருக்கும் ரூ.18 லட்சம் அபராதமும் நீதிமன்றம் விதித்துள்ளது.
பசு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று சிறப்பு அரசு வழக்கறிஞர் சந்திரேஷ் மேத்தா தெரிவித்தார்.
