மோசமான நிலையில் யமுனை நதி நாடாளுமன்ற நிலைக்குழு தகவல்
சமீபத்தில் யமுனை நதியின் தூய்மை மற்றும் உயிர்வாழும் திறன் தொடர் பாக நீர்வளங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில்,”ஆய்வு செய்யப்பட்ட 33 தளங்களில் தில்லியின் 6 இடங்கள் உட்பட 23 இடங்களில் யமுனை நதி மிக மோசமான அளவில் மாசடைந்துள் ளன. அதாவது 30% அளவில் தூய்மை யான நீர் இருப்பதற்கான தரங்களை யமுனை இழந்துவிட்டன. குறிப்பாக தில்லியின் பல்லாவிலிருந்து ஓக்லா வரை பாயும் பகுதியில் யமுனை கிட்டத்தட்ட உயிர்வாழும் திறனையே இழந்துவிட் டது. நதியின் உயிர்களைத் தக்கவைக்கும் திறனைப் பிரதிபலிக்கும் கரைந்த ஆக்ஸிஜன் (DO) அளவுகள் தில்லி பகுதியில் கொஞ்சம் கூட இல்லை” என அதில் கூறப்பட்டுள்ளது.