முஸ்லிம் ஜமாத்தின் தலைவர் மவுலானா சஹாபுத்தீன்
வெறுப்பும் மற்றும் பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துகளை வெளியிட யாருக்கும் உரிமை இல்லை. இது அமைச்சராக இருக்கும் சஞ்சய் நிஷாத்துக்கு பொருந்தும். நிறங்களைத் தவிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யவில்லை. அனைவருக்கும் நீதியை உறுதி செய்ய, பாகுபாடு இல்லாமல் செயல்படுவதாக சஞ்சய் பிரமாணம் செய்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஷா நவாஸ் ஆலம்
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் தலைவர்களிடையே யார் சமூகத்தில் அதிக வெறுப்பைப் பரப்ப முடியும்; பிரிவினையை உருவாக்க முடியும் என்பதற்கான போட்டி நடந்து வருகிறது. இதுபோன்ற கருத்து நமது பன்முக சமூகத்தின் அடிப்படை நெறிமுறைகளுக்கு எதிரானது.
மூத்த ஊடகவியலாளர் மாதவன் நாராயணன்
தென் மாநில மக்களை மதராசிகளாக மட்டுமே அடையாளப்படுத்தக் கூடாது. தென் மாநிலங்களில் மொழித் தனித்துவம், அதற்கான 5,000 ஆண்டுக்கால வரலாறு உள்ளது. தென் மாநில மக்களின் தனித்துவத்தை அனைவரும் உணர வேண்டும். குறிப்பாக வட இந்தியர்கள் இந்தியாவின் சமூக வரலாற்றை கற்க வேண்டும்.
சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி
2024இல் ஒன்றிய அரசு ஸ்டார்லிங்க் குறித்து சில கவலைகளை தெரிவித்தது. ஆனால் அதே ஒன்றிய அரசு இப்போது ஸ்டார்லிங்கை வரவேற்பதில் முன்னணியில் உள்ளது. ஒன்றும் புரியவில்லை.