states

img

பஞ்சாப்பில் சிவசேனா தலைவர் சுட்டுக்கொலை

பஞ்சாப்பில் சிவசேனா தலைவர் சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்ட சிவசேனா (ஷிண்டே) தலைவராக இருப்பவர் மங்கத் ராய் மங்கா. இவர்  வெள்ளியன்று இரவு பால் வாங்க கடை வீதிக்குச் சென்றார். அப்போது அடை யாளம் தெரியாத மர்ம நபர்கள் 3 பேர் மங்கத் ராயை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 3 தோட்டாக்கள் மங்கத் ராய்  நெஞ்சில் பாய அவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். மங்கத் ராய் மீது வைத்த குறி தவறியதால் அவருக்கு அருகில் இருந்த 12 வயது சிறுவனைத் தோட்டா தாக்கியது. சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 மங்கத் ராய் மங்கா சிவசேனா (ஷிண்டே) மோகா மாவட்டத் தலைவராக மட்டுமின்றி மாநில அளவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் பஞ்சாப் மாநி லத்தில் ஒரு சில இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.