states

img

அநீதிக்கு எதிராக குரல் எழுப்பும் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள்

சண்டிகர் “அநீதிக்கு எதிராக குரல் எழுப்பும் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள்” என முன்னாள் மல்யுத்த வீராங்க னையும், ஹரியானா காங்கிரஸ் எம்எல்ஏவுமான வினேஷ் போகத் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலத்தின் வாரணாசியைச் சேர்ந்தவர் ரோஷ்னி ஜெய்ஸ்வால். சமூக வலைதளங்களில் செல் வாக்கு பெற்றவரான ரோஷ்னி ஜெய்ஸ்வாலை (இன்ஸ்டா ரீல்ஸ்) பாஜகவுக்கு மிக நெருக்கமான ராஜேஷ் குமார் 4 ஆண்டுகளாக பாலியல் தொல்லைகளுடன், பலாத்கார மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தட்டிக் கேட்டதால் ரோஷ்னி ஜெய்ஸ்வாலை ராஜேஷ் குமார் சமீபத்தில் தாக்கி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வீடியோவாக கசிய, வாரணாசி போலீசார் ராஜேஷ் சிங் மீது நட வடிக்கை எடுக்காமல் ரோஷ்னி ஜெய்ஸ்வால் மீது ஒருதலை பட்சமாக வழக்குப் பதிவு செய்துள் ளனர். வாரணாசி போலீசாரின் இந்த செயல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பு இதுதானா?

இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், மகிளா காங்கிரஸ் தலைவருமான அல்கா லம்பா மற்றும் முன்னாள் மல்யுத்த வீராங்கனையும், ஹரியானா காங்கிரஸ் எம்எல்ஏவுமான வினேஷ் போகத் செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது கண்டனம் தெரிவித்தனர்.  இதுதொடர்பாக அல்கா லம்பா  கூறுகையில்,”பிரதமர் மோடி அடிக்கடி ஒவ்வொரு முறையும் “பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (மகள்களைக் காப்பாற்றுங்கள், மகள்களுக்குக் கல்வி கொடுங் கள்)” என்று முழங்கிக் கொண்டு இருக்கிறார். ஆனால் அவரது சொந்த தொகுதியில் (வாரணாசி) ரோஷ்னி ஜெய்ஸ்வால் என்ற பெண்ணுக்கு அநீதி நிகழ்ந்துள் ளது. பாஜகவுக்கு நெருக்கமான ராஜேஷ் சிங், ரோஷ்னி ஜெய்ஸ் வாலை 4 ஆண்டுகளாகப் பின் தொடர்ந்து, தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல் பாலியல் பலாத் கார மிரட்டலும் விடுத்துள்ளார்.  ரோஷ்னி மற்றும் அவரது குடும்பம் பாஜக அரசின் நெருக்கடியால் சிறை செல்ல தயாராகி வரு கிறது. ஆனால் ரோஷ்னிக்கு பாலி யல் தொந்தரவுடன் தாக்குதல் நடத்திய ராஜேஷ் சிங் சுதந்திர மாக இருக்கிறார். இதன் மூலம் போராட விரும்பும் பெண்களின் வலிமையையும், குரலையும் உடைக்க பாஜக விரும்புகிறது என்பது தெளிவாக தெரிகிறது” எனக் கூறி கண்டனம் தெரி வித்தார். தொடர்ந்து வினேஷ் போகத் செய்தியாளர்கள் சந்திப்பின் பொ ழுது பேசுகையில்,”ரோஷ்னி ஜெய்ஸ்வால் விவகாரம் தொடர் பாக பாஜக மற்றும் உத்தரப்பிர தேச அரசு இன்னும் பதிலளிக்க வில்லை. பாஜக அரசாங்கம் பெண்களின் குரல்களை எவ்வாறு நசுக்குகிறது என்பது நாட்டு மக்க ளுக்கு தெரியும். பெண்களுக்கான பாதுகாப்பு மிக முக்கியமானது. நாட்டின் மக்கள்தொகையில் 50 சதவீதம் பெண்கள் உள்ளனர். பெண்களுக்கு அவர்களது உரிமை கள் மற்றும் பாதுகாப்பு முக்கியம்.  பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இதை மறந்துவிடலாம். ஆனால் நான் இறுதிவரை போராடுவேன். பிரிஜ் பூஷனுக்கு எதிராக பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக் காக நாங்கள் போராடும் போது காவி நிறத்தில் உள்ளவர்கள் ஏன் குரல் எழுப்பவில்லை?” என அவர் கேள்வி எழுப்பினார்.