மின்சார சட்ட திருத்த வரைவு மசோதாவை உடனடியாக திரும்பப் பெறுக! அணுசக்தி சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டால் நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடிக்கும்
தேசிய மின் ஊழியர்கள் ஒருங்கிணைப்புக் குழு, மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை, ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டாக எச்சரிக்கை
புதுதில்லி மின்சார சட்ட திருத்த வரைவு மசோதா, அணுசக்தி சட்டத்தில் திருத்தங்கள் மேற் கொண்டால் நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடிக்கும் என தேசிய மின் ஊழியர்கள் ஒருங்கி ணைப்புக் குழு, மத்திய தொழிற் சங்கங்களின் கூட்டு மேடை, ஐக்கிய விவசாயிகள் முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக தேசிய மின் ஊழியர்கள் மற்றும் பொறியாளர் கள் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுதீப் தத்தா வெளியிட்டுள்ள அறிக்கை யில்,“தேசிய மின் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் ஒருங்கி ணைப்புக் குழுவின் (NCCOEEE) தலைமையும், மத்திய தொழிற் சங்கங்களின் கூட்டு மேடையும் (Joint Platform of Central Trade Unions), ஐக்கிய விவசாயிகள் முன்னணியும் (skm) டிசம்பர் 14 அன்று தில்லியில் உள்ள பி.டி. ரணதிவே பவனில் ஒன்றாக கூடின. மின்சாரத் துறையின் முக்கி யப் பங்குதாரர்களான ஊழியர்கள் மற்றும் நுகர்வோர் ஆகியோரி டையே பரந்த ஒற்றுமையையும், ஒருங்கிணைந்த நடவடிக்கை யையும் கட்டி எழுப்புவதற்கும், மின்சாரத்திற்கான உரிமையையும் மற்றும் நம் நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பையும் பாதுகாக்கும் நோக்கில் இந்தக் கூட்டம் கூட்டப் பட்டது. இக்கூட்டத்திற்கு டாக்டர் தர்ஷன்பால் சிங், மோகன் சர்மா, வித்யாசாகர் கிரி ஆகியோர் தலை மை தாங்கினர். தேசிய மின் ஊழியர் கள் மற்றும் பொறியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு, மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆகியவற்றின் மூத்த தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நாட்டின் உழைக்கும் மக்கள் மற்றும் விவசாயிகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் தொ டர்ச்சியான தாக்குதல்களை இந்தக் கூட்டம் மிகவும் தீவிரமாக கவ னத்தில் எடுத்துக் கொண்டது. மின்சாரத் துறை தனியார்மய மாக்கல், முன்பணம் செலுத்தி (ப்ரீ பெய்டு) ஸ்மார்ட் மீட்டர் நிறுவுதல். மின்சார சட்ட திருத்த வரைவு மசோதா, 2025 ஆகியவற்றை மையமாகக் கொண்டு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது. குறிப் பாக பூர்வாஞ்சல் மற்றும் தட்சி ணாஞ்சல் பகுதிகளில் உள்ள வித்யுத் வித்ரன் நிகாம் லிமிடெட் நிறுவனங்களைத் தனியார்மய மாக்குவதில் உத்தரப்பிரதேச பாஜக அரசு காட்டும் பிடிவாத மான முயற்சிகள் குறித்து கூட் டத்தில் தலைவர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்தனர். மேலும், தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அணுசக்தி சட்டம் மற்றும் அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்புச் சட்டத்தில் ஆகி யவற்றில் மோடி அரசாங்கம் திருத் தங்களைச் செய்யலாம் என்பதும் கவனத்திற்குக் கொண்டு வரப் பட்டது. தொடர்ந்து இந்த கூட்டம் ஒரு மனதாக ஒன்றிய அரசிடம் பின் வரும் கோரிக்கைகளை முன் வைத்தது: H மின்சார சட்ட திருத்த வரைவு மசோதா, 2025-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். Hஅணுசக்தி சட்டம் மற்றும் அணு சக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்புச் சட்டம் ஆகியவற்றில் முன்மொழியப்பட்ட திருத் தங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். H முன்பணம் செலுத்தி ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதை உட னடியாக நிறுத்த வேண்டும். H சண்டிகர், தில்லி மற்றும் ஒடிசா போன்ற இடங்களில் உள்ள மின் உற்பத்தி, மின் பகிர்மானம் மற்றும் விநியோகத்தில் உள்ள அனைத்து தற்போதைய தனி யார்மயமாக்கல் அல்லது உரி மையாளர் மாதிரிகளைத் திரும்பப் பெற வேண்டும். H உத்தரப்பிரதேச மாநிலத்தின் பூர்வாஞ்சல் மற்றும் தட்சி ணாஞ்சல் பகுதிகளில் உள்ள வித்யுத் வித்ரன் நிகாம் லிமிடெட் நிறுவனங்களைத் தனியார்மய மாக்கும் முயற்சிகளை உடன டியாக நிறுத்த வேண்டும். H குறுக்கு மானியம் (cross-subsidy) மற்றும் உலகளாவிய சேவை கடமையைத் (univer sal service obligation) தக்க வைத்தல், விவசாயிகள் மற்றும் மற்ற அனைத்து நுகர்வோர் பிரிவினரின் மின்சாரத்திற்கான உரிமையைப் பாதுகாக்க வேண்டும் Hநாடு முழுவதும் மின் கட்டணங்க ளைக் குறைக்க உறுதியான நட வடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் முன்வைக்கப்பட்டன. எச்சரிக்கை அணுசக்தி சட்டம் மற்றும் அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்ட மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தால் தேசிய மின் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் ஒருங்கி ணைப்புக் குழு (NCCOEEE), மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை(Joint Platform of Cen tral Trade Unions), ஐக்கிய விவசா யிகள் முன்னணி (skm) ஆகியவை இணைந்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள் ளது. அதே போல மின்சாரத்துறை யை தனியார்மயமாக்குவதற்கு எதி ராகவும், மின்சார திருத்த வரைவு மசோதா, 2025-க்கு எதிராகவும், அடுத்தாண்டு (2026) ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நாடு முழுவதும் பெரும் போராட்டங் கள் மற்றும் பேரணிகள் நடத்தப் படும் என கூட்டத்தில் அறிவிக்கப் பட்டது. அழைப்பு தேசிய மின் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் ஒருங்கி ணைப்புக் குழுவின் கீழ், மின் ஊழி யர்கள் மற்றும் பொறியாளர்கள் மார்ச் 18, 2026 அன்று தில்லியை நோக்கிப் பேரணியாகச் செல் வார்கள். இந்த பேரணியில் அனை த்து தொழிலாளர்கள் மற்றும் விவ சாய அமைப்புகளும் ஆதரவு மற்றும் ஒருமைப்பாட்டில் பங் கேற்க வேண்டும் என தேசிய மின் ஊழியர்கள் மற்றும் பொறி யாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் மீறி, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தனியார் மயமாக்கல் முயற்சிகளைத் திரும்பப் பெறாமலும், மின்சார திருத்த வரைவு மசோதா, 2025-ஐத் திரும்பப் பெறாமலும் இருந் தால் மின் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் துறைசார் வேலை நிறுத்த நடவடிக்கையை நாட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளா வார்கள் என எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.
