அசாமில் பாஜக அரசை கண்டித்து மாபெரும் பொதுக் கூட்டம்
பாஜக அரசை கண்டித்து தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் நடைபெற்றது. ஞாயிறன்று சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் அசாம் மாநில பிரிவான அசாம் கிருஷி ஷ்ரமிக் யூனியன் சார்பில் நடத்தப்பட்ட இந்த பொதுக்கூட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அசாம் மாநிலச் செயலாளர் சுப்ரகாஷ் தாலுக்தார், சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சன் தாலுக்தர் மற்றும் தொழிலாளர், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.
